onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, August 8, 2019

கோத்தபாயவுடன் என்ன பேசினேன்?: சந்திப்பை விபரித்த சித்தார்த்தன்!

  admin       Thursday, August 8, 2019


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவர் த.சித்தார்த்தன், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேசியிருக்கிறார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் என்னவென, த.சித்தார்த்தனை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியது.

“தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்காக போராடிவரும் கட்சியென்ற அடிப்படையில், சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில், எல்லா தலைவர்களையும் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறோம். இது ஒன்றும் புதிய விடயமல்ல.

கோத்தபாய ராஜபக்ச சந்திப்பிற்கான அழைப்பு விடுத்திருந்தார். எதிர்கால ஜனாதிபதியாகும் வாய்ப்புள்ளவர் என அவரும் கருதப்படுகிறார். அவர் ஜனாதிபதியானால் அவருடன்தான் எமது பிரச்சனையை பேச வேண்டும். அதனால் அவரது நிலைப்பாட்டை அறிய, சந்திப்பிற்காக சென்றேன்.

பல விடயங்கள் பேசினோம். தான் ஜனாதிபதியானால் எப்படியான தீர்வு திட்டங்களை முன்வைப்பேன் என்பதை பற்றியெல்லாம் பேசினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை ஜனாதிபதி தேர்தலில் அவர் கோரவில்லை. ஜனாதிபதியானால், இந்த பிரச்சனையை எப்படி கையாள்வேன் என்பது தொடர்பான கலந்துரையாடலையே அவர் ஆரம்பித்தார். இரா.சம்பந்தனையும் சந்திக்க விரும்புவதாக கூறினார்.

கோத்தபாயவின் விருப்பத்தை இரா.சம்பந்தனிடம் சொல்வதாக அவரிடம் கூறினேன். அந்த செய்தியையும் சம்பந்தனிடம் சொல்வேன்.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக முகம்கொடுக்கும் பிரச்சனைகளை, அவசியமான தீர்க்க வேண்டிய மனிதாபிமான பிரச்சனைகளை அவரிடம் தெரிவித்தேன். இந்த விவகாரங்களில் தமிழ் தரப்பில் எந்த சமரசமும் இருக்காதென்பதை அவரிடம் வலியுறுத்தியிருந்தேன். அப்போது, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை தன்னால் உடனடியாக தீர்க்கலாமென்றார். தனது காலத்தில் 12,000 போராளிகளை விடுதலை செய்ததாகவும், இந்த அரசிற்கு ஆதரவளித்து எத்தனை போராளிகளை விடுதலை செய்தீர்கள் என கேட்டார். அரசியல் கைதிகள் விவகாரத்தை உடனடியாக தீர்ப்பது தனக்கு ஒரு விவகாரமல்ல என்றார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர்கள், கூட்டணிகள் தீர்மானிக்கப்படவில்லை. எமக்கு முன்பாக பல தெரிவுகளாக போட்டியிட தயாராகுபவர்கள் இருக்கிறார்கள். நாம் எமது மக்கள் பிரச்சனைகளுடன் எல்லோரையும் சந்திப்போம். எமது நிலைப்பாட்டை முன்வைப்போம். அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்து, பொருத்தமான முடிவை எடுப்போம்“ என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கோத்தபாயவுடன் என்ன பேசினேன்?: சந்திப்பை விபரித்த சித்தார்த்தன்!

Previous
« Prev Post