onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, August 1, 2019

மகிந்தவோ அல்லது மைத்ரியோ ரணில் இன்றி ஒரு அணுவும் அசையாது !

  admin       Thursday, August 1, 2019


உண்மையில் ரணில் ஐதேகவின் தலைவராக இருந்தாலும் அந்த கட்சி வெளித்தெரியாத ஒரு லொபிக்களாலேயே ஆளப்படுகின்றது. இந்த லொபி என்பது பழைமைவாத உயர்சாதி முதலாளித்துவ குலாம். 

ஏதோ கிடைத்தை ஓட்டையை பயன்படுத்தி பிரேமதாச தலையெடுத்திருந்தாலும் வெறும் மூன்று ஆண்டுகளே அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. அவரின் படுகொலையின் மறைமுக சக்தி இந்த லொபிதான். இந்த லொபியை விட காமினி அணி, அத்துலத்முதலி அல்லது ஜேஆர் அணி, பிரேமதாச அணி என்பனவும் அந்த கட்சிக்குள் இருந்தாலும் லொபிக்களின் ஆதரவு எப்போதும் ஜேஆர் தரப்பினருக்கே உண்டு. பிரேமதாச காலத்தில் எத்தனையோ கட்சி சீனியர்கள் இருந்தும் ஜூனியரான ரணில் மூன்றாம் இடத்துக்கு கொண்டுவரப்பட்டு பின் சிலவருடங்களில் கட்சி தலைவராக்கப்பட்டதும் இந்த லொபிக்களின் செயற்பாடே காரணம்.  

மீண்டும் கட்சியில் இணைந்த காமினி ரணிலை பின்தள்ளி ஜனாதிபதி வேட்பாளரானதும் கட்சி தலைவராக முயற்சித்தாலுமே அவரும் படுகொலை செய்யப்பட்டார். இது ஒரு நுட்பமான வெளித்தெரியா அரசியல்.  காமினி உயர் வகுப்பை சேர்ந்தவராகவும் சீனியராக இருந்தும்கூட கட்சியை விட்டு வெளியேறியதை இந்த லொபிக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

மீண்டும் ஒருமுறை பிரேமதாசாக்கள் தலையெடுத்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கும் இந்த லொபிக்கள் சஜிததை ஒரு போதும் அனுமதிக்கவே மாட்டார்கள். அப்படியுள்ளபோது சஜித்தை அன்மைகாலமாக  அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்களாக ஒரு உத்தியோக பற்று இல்லாத விளம்பரத்தை முன்னெடுத்தது மகிந்த ராஜபக்சதரப்பினர்தான். இவர்களுக்கு அனுசரணையாக மைத்ரியும்,  வேறு ஒரு ரணிலை பிடிக்காத தொழில் அதிபருமே.  ஐதேகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த இவர்கள் செய்த தற்காலிக வேலை இது.

இனி இவர்கள் சஜித் கட்சியை உடைத்து வெளியேறுவார் என்று பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் உண்மையில் சஜித் அவ்வாறு செய்யப்போவதும் இல்லை. அதற்கான அடித்தளமும் அவருக்கு இல்லை. 

ரணில் அல்லது மகிந்தவுக்கு உள்ளது போன்ற Nation wide leadership value  சஜித்துக்கோ அல்லது அந்த கட்சியின் வேறு நபர்களுக்கோ கிடையாது. மைத்ரிக்கு கூட அது இல்லாமல் இருப்பதால்தான் அவர் ஜனாதிபதியாக இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்குள் முடங்கிபோய் உள்ளார்.

கரு ஜெயசூரியவுக்கு உள்ள ஒரே பலம் அவர் கட்சிக்குள் பலம்வாய்ந்த காமினி அணியின் தலையாக இருப்பதுதான். பலவீனம் தனது சம்பந்தி காமினியை போன்றே கட்சியை விட்டு விலகி மகிந்தவிடம் அமைச்சராக இருந்தமை. அத்துடன் இவர் கட்சிக்குள் சீனியரும் அல்ல.  சாதியரீதியில் லொபிக்கள் கருவை ஏற்றுக்கொண்டாலும் அவரின் பலவீனங்களால் அவரால் ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக முடியாது. அதாவது காமினியை போன்றே இவருக்கும் பலவீனம் பாதகமாக இருக்ககூடும். அப்படி ஒரு வேளை ஜனாதிபதி வேட்பாளராகினால் அது ரணிலின் சமரச முயற்சியால் நடப்பதாகத்தான் இருக்கும். ஜனாதிபதி முறைமை ஒழிகின்றது என்கின்ற நிலை உறுதியாக ஏற்படாதவரை ரணில் இந்த ஆபத்தான வேலைக்கு செல்லமாட்டார். 

ஒன்று மட்டும் உறுதியாக கூறமுடியும். இலஙுகை அரசியலில் தற்போது சர்வ வல்லமையுடன் இருப்பவர் ரணில் மட்டுமே.  மகிந்தவோ அல்லது மைத்ரியோ அல்லைது வேறு நபர்களோ அல்ல.   ரணில் இன்றி ஒரு அணுவும் அசையாது இப்போதைக்கு. 

எல்லாம் ரணில் செயல்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மகிந்தவோ அல்லது மைத்ரியோ ரணில் இன்றி ஒரு அணுவும் அசையாது !

Previous
« Prev Post