onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, August 8, 2019

துப்பாக்கி, சாப்பாத்துடன் நல்லூருக்குள் நுழைந்து இராணுவம் சோதிப்பதை நிறுத்த வேண்டும்!

  admin       Thursday, August 8, 2019

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா காலத்தில் இராணுவம் சப்பாத்து, துப்பாக்கியுடன் ஆலய வளாகத்தில் நுழைந்து தமிழர்களை சோதிப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஆலய நிர்வாகமோ, பக்தர்களோ பாதுகாப்பு கோராத நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதி செய்துவிட்டதாக கூறும் அரசு, வடக்கில் மட்டும் ஏன் கெடுபிடிகளை மேற்கொள்கிறது என்றும் கேள்வியெழுப்பினார்.

அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டத்தின் மீதான ஒழுங்குவிதிகள் குறித்து இன்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா தமிழர்களின் அடையாள நிகழ்வாக கருதப்படுகின்றது. இதுவரை ஆலயத்திற்குள் செல்பவர்களை பரிசோதனை செய்ததாக வரலாறு இல்லை.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மிகவும் புனிதமான பகுதி. ஆனால் இன்று அங்கு சப்பாத்து, துப்பாக்கிகளுடன் உள்நுழைந்து தமிழ் மக்களை சோதிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

சீருடை தரித்த இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பையும், மக்களை அசௌகர்யத்திற்கு உள்ளாக்கும் நிலைமைகளையும் ஏற்றுகொள்ள முடியாததாகும்.

ஆலய நிருவாகமும் சரி, பொதுமக்களும், வேறு எவரும் இவ்வாறு பாதுகாப்பு கேட்கவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்திவிட்டதாக கூறும் அரசாங்கம் வடக்கில் மட்டும் ஏன் இவ்வாறு கெடுபிடிகளை கையாள்கின்றது என்பது தெரியவில்லை.

யாழ்ப்பாணம் நல்லூர் கலாசார புனித பூமி. அங்கு எமது கலாசாரத்தை நாசமாக்கும் வகையில் இராணுவம் நடந்துகொள்கின்றது. பிரதமரும்ஈ அரசும் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! துப்பாக்கி, சாப்பாத்துடன் நல்லூருக்குள் நுழைந்து இராணுவம் சோதிப்பதை நிறுத்த வேண்டும்!

Previous
« Prev Post