Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 3 ஆகஸ்ட், 2019

விரைவில் கோத்தா- மைத்திரி சந்திப்பு!

  admin       சனி, 3 ஆகஸ்ட், 2019


அண்மையில் ஜனாதிபதி சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திப்பிற்கான நேரம் கோரியுள்ளார் கோத்தபாய.

இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. கோத்தபாயாசிங்கப்பூரில் தங்கியிருந்தபோது, ஜனாதிபதியுடனான இந்த தனிப்பட்ட உரையாடலை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, எதிர்க்கட்சி வேட்பாளராக களமிறங்குவது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறும் ஒரு அரசியல் முன்மொழிவை அவர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் ஜனாதிபதியைச் சந்திக்க அவகாசம் கோரியிருந்ததோடு, ஜனாதிபதி இந்த கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, சுதந்திரக்கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்குமிடையிலான சந்திப்புக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மைத்திரிக்கு உப ஜனாதிபதி பதவியை கொடுக்கும் வகையில், அரசியலமைப்பு மாற்றமொன்று பற்றி சு.க முன்வைத்த யோசனையை பெரமுன நிராகரித்துள்ளது. உப பிரதமர் பதவியை மாத்திரம் வழங்கலாமென பெரமுன கூறியுள்ளது. எனினும், இந்த யோசனையை சு.க நிராகரித்திருந்தது குறிப்பித்தக்கது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! விரைவில் கோத்தா- மைத்திரி சந்திப்பு!

Previous
« Prev Post