Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

வல்வெட்டித்துறையில் கின்னஸ் புத்தகத்தில் எழுதப்படாத இன்னொரு சாதனையாளர்; அவரைப்போல் இன்னொருவர் வர வேண்டுமா என்பதை தீர்மானியுங்கள்: மங்கள முன்பாக சுமந்திரன்!

  admin       வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019


ஆகவே நாட்டுத் தலைவரை உருவாக்குவதிலே அமைச்சர் மங்கள சமரவீர தான் முதன்மையானவர் என்ற பெருமையைக் கொண்டவர் என்பதால் நாட்டுத் தலைவருக்கான போட்டி அண்மித்துக் கொண்டிருக்கிற இந்த வேளையிலே அவருடைய பங்களிப்பு இப்பொழுது முக்கியமானதாகக் கருதப்படுகிறதால் உங்களுடைய அரசியலும் நீங்கள் உருவாக்குகிற அரச தலைவர்களும் தான் அப்படியானதொன்று இனி நடக்குமா இல்லையா என்பதை தீர்மானிப்பதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.வல்வெட்டித் துறையில் அமைக்கப்பட்ட ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்ற பொது நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு உலக சாதனையாளன். உலக சாதனைகள் படைத்தவர்கள் வல்வெட்டித்துறை மண்ணில் இருந்து தான் வந்திருக்கின்றார்கள். சில கின்னஸ் புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கின்றன. மற்றைய சாதனையாளருடைய சாதனைகள் பல்வேறு வடிவங்களிலே எழுத்திலே படத்திலே வரையப்பட்டிருக்கிறது. சாதனைக்கு புகழ் போன வல்வை மண்ணிலே இன்றைக்கு சரித்திரப் புகழ் பெறும் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. ஆனந்தன் மறைந்து 25 வருடங்களுக்குப் பின்னர் இப்படியான ஒரு நிகழ்வு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அவர் செய்த பல உலக சாதனைகளை சிறுவனாக நேரிலே கண்டவன் நான். நீச்சல் தடாகத்திலே பல நேரம் நீந்தியதை எங்கள் பாடசாலை நீச்சல் தடாகத்தில் தான் அதனைச் செய்தார். ஒவ்வொரு நாளும் நான் சென்று பல மணி நேரம் அவரைப் பார்த்திருக்கிறேன். காலிமுகத்திடலுக்கு முன்பதாக ஒரு மேடையை அமைத்து அவர் நீண்ட நேரம் நடனமாடிக் கொண்டிருந்த போது ஒரு சிறுவனாக அவரோடு கூட நடமாடியவன் நான். ஒற்றைக்காலிலே நின்ற போதும் மெதுவாக நடந்த போதும் இன்னும் பல சாதனைகள் கின்னஸ் புத்தகத்திலே எழுதப்படாத சாதனைகள் பல பல வித்தியாசமான சாதனைகளைப் புரிந்தார். அதில் பலவற்றை நேரில் கண்டு வியந்தோம்.

அவர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு நீந்திக் கடந்த சாதனை அவருடைய மாமனார் நவரட்னசாமி என்பவர் நீந்திக் கடந்திருக்கின்றார். ஆனந்தனும் அதனைச் செய்தார். ஆங்கிலக் கால்வாயைக் கடக்க வேண்டுமென்பது அவருடைய நீண்டகால ஆசை. ஒரு பாரிய வீதி விபத்திலே சிக்குப்பட்டு உடல்நலக் குறைவாக இருந்த போதிலும் நீண்ட நாட்களாக செய்யவிருந்தததைச் செய்ய வேண்டுமென்ற வைராக்கியத்தோடு ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முற்பட்ட போது தான் அவர் மரணத்தை எய்தினார்.

இப்படியான ஒருவர் இந்த மண்ணிலே உதித்தவர் எம் மத்தியில் வாழ்ந்தவர் உலக சாதனைகள் ஒன்று இரண்டு என்று அல்லாமல் ஏழு எழுதப்பட்டுள்ளது. அதற்கு மேலாகவும் பலவற்றைச் செய்தவர். அவருக்கு மதிப்பளிக்கிற வகையிலே இந்த நீச்சல் தடாகம் கொடுக்கப்படுகிறது. நிதிஅமைச்சர் அவர்கள் இந்த விடயத்திலே தன்னுடைய தனிப்பட்ட கரிசனையை எடுத்திருக்கின்றார். ஏனென்றால் அவர் ஆழிக்குமரன் ஆனந்தனின் குடும்பத்து உறவினர். அவருடைய மாமி முறையானவர் தான் திருமதி ஆனந்தன்.

இந்தத் தருணத்திலே நிதி அமைச்சர் அவர்களிடத்திலே முக்கியமான வேண்டுகோளை நான் விடுக்க விரும்புகின்றென். இந்த நாட்டிலே நாட்டுத் தலைவர்களை உருவாக்குகிறவர் என்ற பெருமையைக் கொண்டவர் நிதி அமைச்சர். அவர் நாட்டுத் தலைவர் ஆகுவதில்லை. ஆனால் நாட்டுத் தலைவரை உருவாக்குவதிலே அவர் தான் முதன்மையானவர் என்ற பெருமையைக் கொண்டவர். இன்னொரு நாட்டுத் தலைவருக்கான போட்டி அண்மித்துக் கொண்டிருக்கிற இந்த வேளையிலே அவருடைய பங்களிப்பு இப்பொழுது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

என்னுடைய உரையின் ஆரம்பத்திலே இந்த மண்ணில் இருந்து தோன்றிய இரண்டு சாதனையாளர்களைப் பற்றிச் சொன்னேன். அதில் ஒருவருக்காக இந்த நீச்சல் தடாகம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்றவரைப் போன்ற இன்னொருவர் எங்கள் மத்தியில் இருந்து எழுவாரா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது தெற்கிலே இருக்கிற நீங்கள், மேலும் உங்களுடைய அரசியலும் நீங்கள் உருவாக்குகிற அரச தலைவர்களும் தான் அப்படியானதொன்று இனி நடக்குமா இல்லையா என்பதை தீர்மானிப்பதாக இருக்கும். ஆகையினாலே நிதானமாக செயற்பட்டு நாங்கள் பழைய நினைவுகளோடு மட்டும் இந்தச் செயற்பாடுகளொடு தொடர்ந்து எதிர்காலத்தில் பயணிப்பதற்கு ஆவண செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வல்வெட்டித்துறையில் கின்னஸ் புத்தகத்தில் எழுதப்படாத இன்னொரு சாதனையாளர்; அவரைப்போல் இன்னொருவர் வர வேண்டுமா என்பதை தீர்மானியுங்கள்: மங்கள முன்பாக சுமந்திரன்!

Previous
« Prev Post