onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Wednesday, August 14, 2019

காதல் மனைவியுடன் மண்ணில் புதைத்த பச்சிளம் குழந்தை! நிர்கதியான கணவன்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

  admin       Wednesday, August 14, 2019


கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் வசித்து வந்தவர் சரத். சில தினங்களாகவே கன மழையில் சிக்கி தவித்து வருகிறது கேரள மாநிலம். இந்நிலையில் மலப்புறத்தில் கடந்த வெள்ளியன்று சரத் தனது மனைவி கீது மற்றும் தனது ஒன்றரை வயது மகனான துருவனோடு சேர்ந்து அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர். 

அப்போது வெளியில் திடீரென அலறல் சத்தம் கேட்க வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதை கண்டார் சரத். பின் வீட்டினுள் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி பத்திரமாக இருக்குமாறு கூறிவிட்டு வெள்ளத்தை திருப்பிவிட தாயாருடன் வெளியில் சென்று முயற்சித்தார். 

அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட சரத்தின் மனைவி மகன் மற்றும் தாயார் மூவரும் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். சரத் மட்டும் நூலிழையில் உயிர் தப்பினார். இதையடுத்து மீட்புப் பணியினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு நாள்களுக்குப் பின் மனைவி மற்றும் மகனின் உடல் மண் சரிவில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. தாயாரின் உடல் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டது. மேலும் சரத்தின் தந்தை மற்றும் சகோதரர்கள் சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்ததால் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

காதல் திருமணம் செய்துகொண்ட சரத் இனி என்னோடு உணவு உட்கொள்ள என்னை அன்பாக பார்த்துக் கொள்ள யாருமே இல்லையே என்று கண் கலங்கிய நிலையில் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! காதல் மனைவியுடன் மண்ணில் புதைத்த பச்சிளம் குழந்தை! நிர்கதியான கணவன்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Previous
« Prev Post