Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 14 ஆகஸ்ட், 2019

உறவுகளை கையளித்த ஓமந்தையில் பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு!

  admin       புதன், 14 ஆகஸ்ட், 2019


வடக்கு கிழக்கு தழுவிய பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர்வரும் 30 ம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிப்பதோடு அதற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் கோரியுள்ளனர்

எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஊடக சந்திப்பு ஒன்றினை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தில் நடத்தியுள்ளார்கள்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 890 ஆவது நாளாக தொடர்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அன்று வடக்கில் உறவுகளை கையளித்த இடமான ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும்,மாபெரும் போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளோம் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

அத்துடன் ஜனாதிபதி வேட்டபாளாராக முன்வந்துள்ள கோட்டபாய ராஜபக்ச எங்களுக்கு குற்றமிழைத்தவர். அவரிடம் தான் எங்கள் உறவுகளை நாங்கள் கையளித்தோம். முல்லைத்தீவில் வட்டுவாகல், செல்வபுரம், ஓமந்தையில் பல முகாம்களில் கையளித்தோம். அவரும் சேர்ந்துதான் எங்கள் உறவுகளை கடத்தினார்,கொன்றார். அவரால்தான் எமது உறவுகள் பலர் அரசியல்கைதிகளாக இருக்கின்றார்கள். அவர் தன்னுடைய குற்றத்தினை மறைப்பதற்காக மீண்டும் நாடகமேடை ஏறுகின்றார். எங்களுக்கு அரசிலே நம்பிக்கை இல்லை அவர் வந்தாலும் என்ன பதில் தருவார் என்றும் எங்களுக்கு தெரியும் எங்கள் உறவுகளை விடுதலை செய்துவிட்டு அவர் ஜனாதிபதியாக வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

எங்கள் உறவுகளை இப்போதும் மறைத்துவைத்துக்கொண்டிருக்கின்றார்கள் தமிழினத்தை அழிப்பதற்காக பாரியசதி ஒன்றினை மேற்கொள்ளவே அவர் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்

யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை தமிழ் மக்கள் எல்லோரும் தீர்மானம் எடுக்கவேண்டும் என்றும் அவர்தெரிவித்தார்

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! உறவுகளை கையளித்த ஓமந்தையில் பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு!

Previous
« Prev Post