onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, August 1, 2019

சஹ்ரானை நெருங்கினோம்; டிமிக்கி கொடுத்து விட்டார்: சிஐடி சாட்சியம்!

  admin       Thursday, August 1, 2019


நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று இடம்பெற்ற, தெரிவுக்குழு விசாரணையின் போதே இதனை தெரிவித்தார்.

அவர் சாட்சியமளிக்கையில்,

கேள்வி -முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து முதலில் எப்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன?

பதில்- 2017ஆம் ஆண்டு. இதில் சிங்கள, பௌத்த, முஸ்லிம் மற்றும் விடுதலைப்புலிகள் குறித்து ஆராயப்பட ஆரம்பிக்கப்பட்டது. நாலக சில்வாவின் மூலமாக இதன் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டது. பஹங்களாதேஷ் ஹொட்டலொன்றில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, நாமும் கவனம் செலுத்தி இவை குறித்து ஆராய தொடங்கினோம்.

கேள்வி- நீங்கள் செய்த விசாரணைப் பிரிவு எப்போது உருவாகியது? அதில் தௌஹீத் அமைப்பைதடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டதா?

பதில்- ஆம். ஐ.எஸ் கொள்கைகள் என்ன என்றெல்லாம் ஆராய்வோம். பொலிஸ்மா அதிபருக்கும் தெரிவிப்போம்.

கேள்வி- ஏன் இங்கு அப்படியொரு அமைப்பை உருவாக்க வேண்டுமென நினைத்தீர்கள்?

பதில்- பங்களாதேஷ் ஹொட்டலில் ஒரு குண்டுத்தாக்குதல் நடந்தது. அதன் பின்னர் எமக்கும் இவ்வாறான நிலைமைகள் உருவாகலாமென்ற நோக்கத்தில், அவற்றை தடுக்க தயாராகினோம். ங்களாதேஷ் போல தாக்குதல் நடத்தினால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என ஜப்பான் அதிகாரியொருவர் எம்மிடம் கேட்டார். நான் இந்த கேள்வியை நாலக சில்வாவிடம் கொண்டு சென்றேன். பின்னர் இதை ஆராய்ந்தோம். இதை தடுக்க உங்களிற்கு என்ன வசதிகள் தேவையென்றார்கள். வாகனங்கள், கமராக்கள், மென்பொருள் உள்ளிட்டவற்றை கேட்டோம். அதற்கமைய கண்காணிப்பு வாகனமொன்று வழங்கப்பட்டது. அது யப்பான் வாகனம். அது உயரிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. கமரா பொருத்தப்பட்டது

கேள்வி- சஹ்ரானின் அராஜகங்கள் திகன சம்பவத்துடன் அதிகரித்திருந்தனவா?

பதில்- ஆம். அதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். ஆதரவும் கூடியது.

கேள்வி- இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள், தகவல்கள் இருந்தும் சஹ்ரானை ஏன் கைது செய்ய முடியவில்லை?

பதில்- பல வழிகளில் நடவடிக்கை எடுத்தோம். சஹ்ரான் குறித்த தகவல்களை பல இடங்களில் தேடினோம். முஸ்லிம் அதிகாரிகளை நியமித்தும் தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை.

கேள்வி- என்ன பலவீனம் இருந்தது? தொழில்நுட்பம் கைகொடுக்கவில்லையா?

பதில்- அதனை பயன்படத்த முடியாமல் போய்விட்டது.

கேள்வி- ஏன்?

பதில்- நாலக சில்வா இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இல்லாமல் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் போனது. சில விசாரணைகள் இருந்த காரணத்தினால் எம்மால் வாகனத்தையும் பயன்படுத்த முடியவில்லை.

கேள்வி- ஏன் வாகனத்தை பயன்படுத்தவில்லை?

பதில்- நாலக சில்வாவிற்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட காரணத்தினால்.

கேள்வி -அதற்கும் வாகனத்திற்கும் என்ன தொடர்பு?

பதில்- விசாரணைக்குழுவினர் இந்த வாகனத்தை பயன்படுத்த முடியாதென கூறினர்.

கேள்வி- ஏன்?

பதில்- அதனை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

கேள்வி- யார் அவ்வாறு கூறியது?

பதில்- குற்றப்புலனாய்வு பிரிவு.

கேள்வி- நீங்கள் ஏன் சாட்சியங்களை ஆராய முயற்சிக்கவில்லை.

பதில்- முயற்சித்தோம். குறிப்பாக, முதல்முறை முறைப்பாடு செய்தவரின் வாக்குமூலம் பெற முயற்சித்தோம்.

கேள்வி- யார் முதலில் முறையிட்டது?

பதில்- காத்தான்குடி மௌலவி ஒருவர்.

கேள்வி- யார் அவர்?

பதில்- மௌலவி கே.ஆர்.எம்.சஹ்லான்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சஹ்ரானை நெருங்கினோம்; டிமிக்கி கொடுத்து விட்டார்: சிஐடி சாட்சியம்!

Previous
« Prev Post