Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 3 ஆகஸ்ட், 2019

புலம்பெயர் தமிழர்கள் அமைப்பின் முக்கிய நபர் யாழ்ப்பாணத்தில் கைது

  admin       சனி, 3 ஆகஸ்ட், 2019


எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் இணையத்தளமொன்றின் ஸ்தாபகரும் புலம்பெயர் தமிழர்கள் அமைப்பின் முக்கிய நபராகவும் கருதப்படக் கூடிய நடராஜா சேதுரூபன் என்பவர் யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்வேயிலிருந்து இலங்கை வந்துள்ள இவர் யாழ்ப்பாணம் நெல்லியடி பிரதேசத்தில் வைத்தே நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல்விடுத்து கப்பம் கோரிய சம்பவம் தொடர்பில் இவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கிளிநொச்சி மஜிஸ்ட்ரேட் நீதிபதி விடுத்திருந்த பிடியாணையின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுத்த காலத்தில் புலிகளுக்காக வெளிநாட்டில் நிதி திரட்டினார் என்ற குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! புலம்பெயர் தமிழர்கள் அமைப்பின் முக்கிய நபர் யாழ்ப்பாணத்தில் கைது

Previous
« Prev Post