Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

கடைசிக்கட்ட பரபரப்புக்கள்: உத்தேச யாப்பில் திருத்தம் செய்த பின்னரே ஐ.தே.க கூட்டணி!

  admin       வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019


பொதுக்கூட்டணியொன்றை அமைக்க ரணில் தலைமையில் எடுக்கப்பட்ட முயற்சிக்கு, ஐ.தே.கவின் செயற்குழு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கணிசமான உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ரணில் தலைமையில் கூட்டு கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு நேற்று முன்தினம் இரவு அவசரமாக நடந்தது. இதன்போது, மேற்படி முடிவு எடுக்கப்பட்டது.

அமைச்சர்கள் மனோ கணேசன், ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம் ஆகியோரும், ஐ.தே.க சார்பில் அமைச்சர்கள் ஹபீர் ஹாசிம், ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

செயற்குழுவில் இடம்பெற்ற விவகாரங்களை ஐ.தே.க தரப்பில் விளக்கப்பட்டது.

அமைச்சர் ராஜித குறிப்பிடும்போது- பொதுக்கூட்டணியின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைய வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும். இதைவிடுத்து, ஐ.தே.கவை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணம் எம்மிடமில்லை. பொதுக்கூட்டணியின் செயலாளராக ஜனாதிபதி தேர்தல் வரை செயற்பட்டு விட்டு, பின்னர் ஐ.தே.கவின் சார்பில் ஒருவரிடம் வழங்குவதே எமது யோசனை. நாம் கொள்கையின் அடிப்படையில் செயற்படுபவர்கள். கொள்கைக்காகவே மைத்திரியுடன் வெளியேறினோம். தற்போதைய நிலையில் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் என்றார்.

மஹிந்த தரப்பை தோற்கடிக்க வேண்டுமெனில் நாம் முதலில் கூட்டணி அமைக்க வேண்டும். நாம் சுயலாபம் கருதி கூட்டணி முயற்சியை எடுக்கவில்லை. முரண்பாடுகள் காணப்பட்டால் நாம் இந்த முயற்சியிலிருந்து விலகிச் செல்லவும் தயாராக இருக்கிறோம். ஐ.தே.கவை ஒழிக்க வேண்டிய தேவை எமக்கில்லை என அமைச்சர் சம்பிக்க தெரிவித்துள்ளார்.

கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் ஐ.தே.கவை ஒழிக்கவில்லை. ஐ.தே.க தரப்பிலுள்ள ஒருவரே அதை செய்கிறார் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பொதுக்கூட்டணியின் அவசியத்தை ரணிலும் பேசினார்.

பொதுக்கூட்டணக்கு முன்னதாக, அது தொடர்பான யாப்பில் சில திருத்தங்களை செய்வதென தீர்மானிக்கப்பட்டது. திருத்தங்களின் பின்னர் இன்று அல்லது நாளை கட்சி தலைவர்கள் மீண்டும் கூடி, கூட்டணி விவகாரத்தை இறுதி செய்வார்கள். திருத்தங்களை செய்வதற்கு பொறுப்பாக அமைச்சர் ஹபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றிரவும் ரணில் தலைமையில் கட்சித்தலைவர்கள் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடினர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கடைசிக்கட்ட பரபரப்புக்கள்: உத்தேச யாப்பில் திருத்தம் செய்த பின்னரே ஐ.தே.க கூட்டணி!

Previous
« Prev Post