onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, August 1, 2019

ரணில் வீட்டு குசினிக்குள் சுமந்திரன்; ஐ.தே.க, சரத்திற்கு சந்தர்ப்பம் கொடுத்தீர்கள்; எமக்கொரு சந்தர்ப்பம் தாருங்கள்!

  admin       Thursday, August 1, 2019


கிளிநொச்சியில் நேற்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநாச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கட்சி அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே கலந்துகொண்டதுடன் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.

“பல ஆண்டுகள் இங்குள்ள மக்கள் ஐக்கியதேசிய கட்சிக்கு ஆதரவு அளித்தனர். அதேபோன்று சரத் பொன்சகாவிற்கும் சந்தர்ப்பம் வழங்கியாயிற்று. ஆனால் தமிழ் மக்களிற்கு எதுவும் கிடைக்கவில்லை. இம்முறை ஒரு சந்தர்ப்பத்தினை வடக்கு பகுதி மக்கள் எமது கட்சிக்கு வழங்க வேண்டும். எதிர்வரும் 18ம் திகதி எமது கட்சி மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய உள்ளோம். அதன்போது தெரிவாகும் வேட்பாளரிற்கு இம்முறை இப்பகுதி மக்கள் சந்தர்ப்பம் ஒன்றை வழங்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கியதேசிய கட்சிக்கு ஆதரவினை வழங்கி எதை தமிழ் மக்களிற்கு பெற்று கொடுத்தார்கள். இதுவரை தமிழ் மக்களிற்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் தமக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்கொண்டு சுகபோக வாழ்க்கையை வாழ்கின்றனர்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லை. அவர்கள் அனைவரும் ஐக்கியதேசிய கட்சியினர். சுமந்திரன் ரணில் விக்ரம சிங்கவின் வீட்டு குசினியில் வாழ்கின்றார். இதுவரை தமிழ் மக்களிற்கு இவர்களால் எதையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களிற்கு வேண்டிய பல அபிவிருத்திகளை நாம் செய்து கொடுத்தோம். இந்த அரசாங்கம் பொறுப்பெடுத்து தமிழ் மக்களிற்கு எதையும் செய்து கொடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை எமக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். அடுத்த ஜனாதிபதி எமது கட்சியிலிருந்தே தெரிவாவார். அவ்வாறு தெரிவானதும் இப்பகுதி மக்களிற்கு பல அபிவிருத்திகளை நாம் முன்னெடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில் இங்கு வெளிநாட்டு குப்பைகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோது,

வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் மாத்திரமல்ல. இங்கும் குப்பைகளை போடுபவர்கள் இவர்கள்தான் எனவும் அவர் தெரிவித்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ரணில் வீட்டு குசினிக்குள் சுமந்திரன்; ஐ.தே.க, சரத்திற்கு சந்தர்ப்பம் கொடுத்தீர்கள்; எமக்கொரு சந்தர்ப்பம் தாருங்கள்!

Previous
« Prev Post