onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Wednesday, August 7, 2019

காலையில் நடந்த கோர சம்பவம்; யாழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் மரணம்!

  admin       Wednesday, August 7, 2019


உரும்பிராய் - கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிள் (எம்டி90) ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில் பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் (பல்சர்) மோதி நிலை குலைந்து டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து பல்சர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.



logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! காலையில் நடந்த கோர சம்பவம்; யாழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் மரணம்!

Previous
« Prev Post