Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

நாவற்குழி இளைஞர்கள் வழக்கு: சட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் தப்பியோடியது சட்டமா அதிபர் திணைக்கள வாகனமா?

  admin       வியாழன், 1 ஆகஸ்ட், 2019


சட்டத்தரணிகள் ஓய்வறைக்கு முன்பாக சட்டத்தரணிகள் உரையாடிக் கொண்டிருந்தபோது, இராணுவ புலனாய்வாளர்கள் கைத்தொலைபேசியில் அவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தினர். இதை அவதானித்த குருபரன், உதவிக்கு ஆட்களை அழைத்து புலனாய்வாளர்களை விரட்டிச் சென்றபோது, அவர்கள் வாகனமொன்றில் ஏறி தப்பிச் சென்றனர்.

மேலதிக மன்றாடியார் அதிபதி சொய்த்திய குணசேகர பயணித்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாகனத்தில் ஏறி அவர்கள் தப்பி சென்றதாகவும், இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் முறையிடவுள்ளதாகவும் குருபரன் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த வருடம் குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளை புகைப்படம் பிடித்தும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் நடந்து கொண்டனர். அது தொடர்பில் நீதிபதியின் கவனத்திற்கு சட்டத்தரணிகள் கொண்டு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்ய வேண்டும். என கோரி நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் வழக்கு தொடரப்பட்டு உள்ளமை உள்ளிட்ட காரணங்களை முன் வைத்தார் மேலதிக மன்றாடியார் அதிபதி.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளே யாழ்.மேல் நீதிமன்றில் ஒன்றரை வருடங்களுக்கு மேல் நடைபெற்றன. அந்நிலையில் அண்மையில் குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைகளை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று முன்னெடுக்க யாழ்.மேல் நீதிமன்று கட்டளையிட்டது.

அதேவேளை குறித்த வழக்கினை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைத் தள்ளுபடி செய்யக் கோரும் சட்ட மா அதிபரின் மேன்முறையீட்டு சிறப்பு அனுமதி மனுவை இடைக்காலக் கட்டளையின்றி உயர் நீதிமன்றம். கடந்த செவ்வாய்க்கிழமை ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நாவற்குழி இளைஞர்கள் வழக்கு: சட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் தப்பியோடியது சட்டமா அதிபர் திணைக்கள வாகனமா?

Previous
« Prev Post