onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, July 29, 2019

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரின் உயிரை பலியெடுத்த கோர விபத்து!

  admin       Monday, July 29, 2019


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்தும், தம்புள்ளை நோக்கி பயணித்த பாரவூர்தியும் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து மதவாச்சி - அநுராதபுரம் வீதியின் வஹமலுகொல்லேவ பகுதியில் நேற்றிரவு 11.50 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த 12, 30 மற்றும் 53 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.


இதேவளை, காயமடைந்தவர்களில் 3 பெண்களும், 2 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

அவர்கள் மதவாச்சி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாரவூர்தியின் சாரதி தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரின் உயிரை பலியெடுத்த கோர விபத்து!

Previous
« Prev Post