Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 7 ஜூலை, 2019

முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டிய பெண்ணிடம் ஆறரை மணித்தியால விசாரணை: கள்ளத் தொடர்பு என ஊர் மக்கள் குற்றச்சாட்டு!

  admin       ஞாயிறு, 7 ஜூலை, 2019


சிங்கள ஆணொருவரை திருமணம் செய்ததால் முஸ்லிம் சமூகத்தில் அச்சுறுத்தலை சந்தித்ததாக அண்மையில் பரபரப்பை கிளப்பிய அப்துல் ஹசன் பாத்திமாவிடம் சி.ஐ.டியினர் நேற்று ஆறரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

அட்டலுகம பகுதியை சேர்ந்த இந்த முஸ்லிம் பெண், அண்மையில் பொதுபலசேன தலைமையகத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் சுமத்தியிருந்தார். ஷரியா சட்டம் தமது பகுதியில் அமுலில் உள்ளதாகவும், தனது கணவனை மதம் மாறுமாறு உயிரச்சுறுத்தல் தந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று காலை 9 மணியளவில் சிஐடியில் முன்னிலையான அவர் ஆறரை மணிநேரம் துருவிதுருவி விசாரிக்கப்பட்டார்.

இதேவேளை, அட்டலுகம பகுதியிலுள்ள பொதுமக்கள் சிலரும், பள்ளிவாசல் நிர்வாகிகளும் இணைந்து செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

அவர்களின் தகவலின்படி, இந்த பெண்மணி இரண்டு திருமணம் முடித்துள்ளார். இரண்டாவதாகவே சிங்களவர் ஒருவரை மணம் முடித்துள்ளார். கடந்த மார்ச் 24ம் திகதி இவரது கணவன் வேலைக்கு சென்ற பின்னர், இன்னொரு ஆணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை அவதானித்த அயலவர்கள் வீட்டை சுற்றிவளைத்து பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்தனர்.

இதன்படி அங்கு சென்ற பொலிசார், அந்த ஆணை கைது செய்து, துணியால் முகத்தை மூடி வீட்டிலிருந்து அழைத்து சென்றனர்.

இந்த பெண்ணை மதம் மாறுமாறு யாரும் வற்புறுத்தவில்லை, இந்த பகுதியில் முஸ்லிம் மற்றும் சிங்கள குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும்போது, சிங்கள மக்களுடன் கூட பேசாது ஞானசார பகிரங்க ஊடக மாநாட்டை நடத்தி தவறான தகவலை வெளியிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டிய பெண்ணிடம் ஆறரை மணித்தியால விசாரணை: கள்ளத் தொடர்பு என ஊர் மக்கள் குற்றச்சாட்டு!

Previous
« Prev Post