onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, July 29, 2019

வெடி சத்தத்தில் அதிர்ந்தது வவுனியா!

  admin       Monday, July 29, 2019


ரிசாத் பதியுதீன் மீண்டும் இன்று இரவு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் உள்ள தினச்சந்தைக்கு முன்னால் வெடி கொளுத்தி கொண்டாடினர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கல் வேண்டும் என அத்துரலிய ரத்னதேர்ர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லீம் அமைச்சர்கள், முஸ்லிம் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிரூபிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இதனையடுத்தே வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி, லரீப் மற்றும் அமைச்சர் ரிசாத் அவர்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சூழலை மாசுபத்தும் இந்த வெடிகளால் மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும்!




logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வெடி சத்தத்தில் அதிர்ந்தது வவுனியா!

Previous
« Prev Post