Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, July 8, 2019

பனைமரத்தில் கள் இறக்குவோருக்கு ரணிலின் மகிழ்ச்சியான செய்தி!

  admin       Monday, July 8, 2019


வடகிழக்கு மாகாணங்களில் பனையை அடிப்படையாகக்கொண்ட உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாளதார அலுவல்கள், மீள் குடியமர்வு, புனர்வாழ்வு ,வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஞானசோதி தெரிவித்தள்ளார்.

இதன்படி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பிற்கமைய 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பனையை அடிப்படையாக கொண்ட கருப்பட்டி உள்ளிட்ட தயாரிப்புகளை மேம்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்பு விடுத்துள்ளதாக கூறிய அவர், இந் நிதி உதவியின் கீழ் பனங்கருப்பட்டி தயாரிப்பு , இனிப்பு வகைகள், பனங்கள்ளை போத்தலில் அடைத்தல், பனங்கட்டி மத்திய நிலையங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு மேற்படி நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி, முலலைத்தீவு மற்றும் ஏனைய மாவட்டங்களில் இந்த தொழில் துறையை மேம்படுத்துவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதுடன் கடந்த வரவு செலவ திட்டத்தில் இந்த தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக 100 மில்லியன் முன்மொழிவு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

”வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பனை மூலமான தொழில்துறை அப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்துக்கு பெரிதும் உதவி வருகின்றது. வட மாகாணத்தில் சுமார் 11 மில்லியன் பனைமரங்கள் இருந்த போதும் இவை முழுமையான பொருளாதார நலன் பெறும் நோக்கில் வினைத்திறனாக பயன்படுத்தப்படவில்லை. சத்துணவு தயாரிப்புக்கள் பெப்ரவரி தொடக்கம் ஓகஸ்ட் வரை கூடுதலாக மேற்கொள்ளப்படுகின்றன. பனைச் சீவல் தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களாக இருந்த போதும் இவர்கள் இத் தொழில்துறை மூலமான பலன்களை முழுமையாக பெறவில்லை. எனவே இந்த தொழில் துறை தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பனங்கட்டித் தயாரிப்புக்கள் மருத்துவ ரீதியில் மக்கியத்துவம் வாய்ந்ததாகவும் போசாக்கு உள்ளிட்டவற்றைக் கொண்ட முக்கிய உணவுப் பொருளாகும். இதன் மூலம் இனிப்பு வகைகள் தயாரிக்க முடியும். இதற்காக எமது அமைச்சு, பனை அபிவிருத்தி கூட்டுறவு துறையிலும் பனங்கருப்பட்டி உற்பத்தி தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது.

நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிக்க எமது அமைச்சு திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பில் நடத்தப்பட்ட பேச்சுவசார்த்தையில் பனை கூட்டுறவுச் சங்கங்கள் பனைங்கள் உற்பத்தியை போத்தலில் அடைக்கும் திட்டம் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதனை சந்தைப்படுத்துவது தொடர்பிலும் கருத்து தெரிவித்திருக்கின்றன.

இத் திட்டங்களுக்கு உதவுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஷேட வரவு செலவுத்திட்ட ஆலோசனை மூலமாக 100 மில்லியன் நிதியை ஒதுக்கியிருக்கிறார்.” என்றார்.

இதேவேளை, தமது அமைச்சு மாவட்ட மற்றும் பிராந்திய நிர்வாகத்தின் பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பனைமரத்தில் கள் இறக்குவோருக்கு ரணிலின் மகிழ்ச்சியான செய்தி!

Previous
« Prev Post