onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Wednesday, July 31, 2019

அரச வங்கிகளில் வைப்பிலிட்டுள்ள பணத்துக்கு ஆபத்தா? மீளப் பெற்றுக் கொள்ளுமாறு பந்துல ஆலோசனை

  admin       Wednesday, July 31, 2019


அரச வங்கிகளில் வைப்பிலிட்டுள்ள பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன மக்களிடம் கோரியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நிதிச் சட்டங்களில் திருத்தங்களைச் செய்ய முயற்சித்தால் மக்கள் வைப்பு பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென கோரியுள்ளார்.

அரசாங்கத்தின் உத்தேச நிதிச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டால் ஒட்டுமொத்த நிதி முறைமையும் சீர்குலைந்துவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலருக்கு தேவையான வகையில் நிதிச் சட்டங்களை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நிபுணர்களின் எழுத்து மூல ஒப்புதல் இன்றி சட்டத் திருத்தம் செய்யப்படக் கூடாது என்பதனை வலிறுயுத்தி ஜனாதிபதி அமைச்சரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தல்களை மீறி அரசாங்கம் செயற்பட்டால் மக்கள் அரச வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேறும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அரச வங்கிகளில் வைப்பிலிட்டுள்ள பணத்துக்கு ஆபத்தா? மீளப் பெற்றுக் கொள்ளுமாறு பந்துல ஆலோசனை

Previous
« Prev Post