Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 27 ஜூலை, 2019

நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்காக காத்திருக்கும் கோத்தபாய!

  admin       சனி, 27 ஜூலை, 2019


முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச விரைவில் இந்திய பயணம் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகிறார். இந்த பயணத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கும் நேரம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நீடித்து வருகிறது. கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த கோத்தபாய ராஜபக்ச கடந்த வாரம் நாடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், இந்திய பயணம் ஒன்றை மேற்கொள்ள கோத்தபாய திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கும் கோத்தபாய தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகுவதை இந்தியா விரும்பவில்லையென்பதை, இந்திய பாதுகாப்பு செயலர் நேரில் வந்து மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்திய தரப்பை சமரசம் செய்யும் முயற்சியில் கோத்தபாய தரப்பு இறங்கியுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்காக காத்திருக்கும் கோத்தபாய!

Previous
« Prev Post