onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, July 29, 2019

கீரிமலையில் இருக்கும் சுண்ணாம்புக்கல் அகழ்ந்து எடுத்த பாரிய பள்ளம் தெற்கில் இருந்து வரும் மனித கழிவுகளால் மூடப்படப்போகிறதா?

  admin       Monday, July 29, 2019


கீரிமலையில் இருக்கும் சுண்ணாம்புக்கல் அகழ்ந்து எடுத்த பாரிய பள்ளமும் குப்பைகழிவுகளை போட்டு மூடுவதற்கான செயற்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்த செயற்திட்டத்தை கொரியன் நிறுவனம் ஒன்றே செய்ய முன்வந்திருக்கிறது. 

ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து சிறிலங்காக்கு குப்பைகள் சட்டவிரோதமாக இறக்கப்பட்ட நிலையில் குறித்த வெளிநாட்டு நிறுவனங்கள் பள்ளத்தை நிரப்புகின்றோம் என்ற பெயரில் தங்கள் நாட்டு குப்பைகளைள இங்கே கொண்டு வந்து போடக்கூடிய அபாயமும் எழுந்துள்ளது. ஏற்கனவே கொரியா போன்ற நாடுகள் ஆபிரிக்கநாடுகளில் அணுக்கழிவை கொட்டியதன் விளைவை இன்று கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். பழைமையான வரலாறுகளைக் கொண்ட
மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கும், கீரிமலை நகுலேஸ்வரத்திற்கு இடைப்பட்ட பிரதேசத்திலேயே இச்செயற்றிட்டம் இடம்பெற இருப்பதால் கோவில்களின் புனிதம் பாதிக்கும் அபாயமும் இருக்கிறது.

 அதனைவிட மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக், பொலித்தீன் போன்றவற்றை கொண்டு குறித்த பள்ளம் மூடப்பட்டால் மண்வளமும், பொருளாதார வளமும் கொண்ட வலி வடக்குப் பிரதேசம் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகும். ஏற்கனவே காக்கைதீவில் கொட்டப்படும் குப்பைகளால் அப்பிரதேச விவசாயநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப்பிரதேச மக்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்களும் ஏற்பட்டுள்ளன. தற்போது அநுராதபுரத்திலிருந்து மருத்துவக்கழிவுகள் இங்கே கொண்டுவரப்படுவது போல ஏனைய இடங்களிலிருந்தும் மருத்துவக்கழிவுகள் கொண்டுவரப்படலாம்

மேலும் இச்செயற்திட்டத்திற்கான சபை அனுமதியும் பெறப்படவில்லை. 

அதனால் இச்செயற்பாட்டை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதே எமது பிரதேசத்திற்கு நன்மையாகும்!
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கீரிமலையில் இருக்கும் சுண்ணாம்புக்கல் அகழ்ந்து எடுத்த பாரிய பள்ளம் தெற்கில் இருந்து வரும் மனித கழிவுகளால் மூடப்படப்போகிறதா?

Previous
« Prev Post