Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 29 ஜூலை, 2019

சம்மாந்துறையில் இரட்டை பிள்ளைகளை வெட்டிக்கொன்ற இளம் தாய்!!

  admin       திங்கள், 29 ஜூலை, 2019


சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த வீட்டின் கழிப்பறையில் இரு குழந்தைகளும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

10 மாதங்களான இரு பெண் குழந்தைகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான குறித்த குழந்தைகளின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 

குழந்தைகளின் தந்தையான ஏ. சியாதுல் ஹக், தூக்கத்திலிருந்து எழும்பி காலை 8.00 மணியளவில் குளியலறைக்குச் செல்லும் போது அங்கு தனது இரு இரட்டைக் குழந்தைகளும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதனைக் கண்ட இவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விஜயம் செய்தனர்.

இந்த கொலைச்சம்பவத்துக்கு காரணமாகவிருந்ததாக கூறப்படும் சந்தேகநபரான குழந்தைகளின் தாய், மன நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதுடன், அவர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையின் மன நல பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த கொலைச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பெற்றோர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஆண் குழந்தையொன்று கிடைக்கப்பெற்று அந்த குழந்தை கடந்த வருடம் சலவை இயந்திரத்துக்குள் சிக்குண்டு உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு அந்தக் குழந்தையின் தாய் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்தும் அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும், முறையான சிகிச்சைகள் இன்மையால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும் என பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சம்மாந்துறையில் இரட்டை பிள்ளைகளை வெட்டிக்கொன்ற இளம் தாய்!!

Previous
« Prev Post