Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 24 ஜூலை, 2019

முஸ்லிம் இனவாதிகளால் கல்முனை தரவை பிள்ளையார் ஆலய வீதி பெயர் மாற்றப்பட்டது!

  admin       புதன், 24 ஜூலை, 2019


மேற்படி வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிமின் ரன் மாவத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு காபட் இடும் வேலைத் திட்டம் நேற்று (24) புதன்கிழமை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் சட்டத்தரணியுமான எம்.எஸ்.அப்துல் ரஸாக், எஸ்.எல். முஹிஸின், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம். நபார் உள்ளிட்டோர் இவ்வீதியின் காபட் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வில் திணைக்கள பொறியியலாளர்கள் ஐ.தே. கட்சி பிரதேச முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பெயர் மாற்றம் தமிழ் மக்களை கொதிப்படைய வைத்தது. இந்த இனவாத நடவடிக்கைக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது.


கல்முனை உப பிரதேச செயலக எல்லையாக உள்ள தரவை பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றப்பட்டது. ரண் மாவத் திட்டத்தின் கீழ் காபட் இட்டு புனரமைப்பு செய்யப்படவுள்ள இவ் தரவைப் பிள்ளையார் ஆலய வீதி தற்போது விளம்பர பலகையின் ஊடாக பொது மக்களின் பார்வைக்கு காட்சியளிக்கும் முகமாக கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றம் செய்யப்பட்டு நிறுவப்பட்டு உள்ளதை இனமுறுகலை ஏற்படுத்தும் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டினை கல்முனை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பின்னர் கல்முனை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் சாமுவேல் ராஜன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,எங்களுடைய மனதிற்கு வேதனை தரக்கூடிய செயற்பாடு இன்று பிற்பகல் நடைபெற்றிருக்கின்றது. கல்முனை தரவை பிள்ளையார் வீதியாக இருக்கின்ற வீதிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருக்கின்றவர் தன்னுடைய படத்தை பெரிதாக போட்டு கே.கே.பி வீதி என்று பெயர் வைத்திருக்கின்றார். இந்த வீதி கடற்கரைப்பள்ளி வீதியாக பெயர் மாற்றம் பெற்று இருப்பது வேதனைக்குரிய விடயம். ஏனெனில் ஐந்நூறு வருடங்களுக்கு மேலாக தரவைப் பிள்ளையார் ஆலய வீதியாக இருந்த வீதி திடீர் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.

இற்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் கடற்கரை பள்ளி வீதி என பெயர் பலகை இடப்பட்டபோது எங்களுடைய ஆலய பரிபாலன சபை உதவியுடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு இந்த வீதி கடற்கரை பள்ளி வீதியல்ல தரவைப் பிள்ளையார் வீதி என தீர்ப்பளிக்கப்பட்டது. இன முரண்பாடு தோற்றுவிக்கும் வகையில் சில அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் சதித்திட்டங்களுக்குள் மக்களை பகடைக்காய்களாக்க வேண்டாம்.

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்ற சூழ்நிலையில் சுயலாபம் தேடுகின்ற விடயமாகவே இதனை பார்க்கின்றோம். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி குறித்த விளம்பர பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இலட்சினைகள் பெயர்கள் யாவும் அனுமதி இன்றியே பொறித்துள்ளதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே இவ்வாறானவைகள் சில விஷமிகளின் நிகழ்ச்சி நிரல்கள் ஆகும். பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வலியுறுத்துகின்றோம் என கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவலிங்கம்,எமது மூதாதையரின் சொத்தாகவும் கல்முனை நகரில் இரண்டு கண்கள் ஒரு கண்களாக தென்படும் இந்த ஆலயம் கடற்கரை பள்ளி பெயர் சூட்டப்பட்டு இருப்பது சட்டவிரோதமான செயல்மட்டுமல்ல இரண்டு இனங்களும் ஐக்கியமான வாழ்கின்ற சூழ்நிலையில் குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடாகும். உடனடியாக உரியவர் செயற்பட்டு இந்த வீதி விளம்பர பதாகையை அகற்றி இன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதே எனது நோக்கமாகுமென தெரிவித்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! முஸ்லிம் இனவாதிகளால் கல்முனை தரவை பிள்ளையார் ஆலய வீதி பெயர் மாற்றப்பட்டது!

Previous
« Prev Post