onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Wednesday, July 3, 2019

புலிகளுடன் போதைப்பொருளை தொடர்புபடுத்தி ஜனாதிபதியும் பேச முடியாது!

  admin       Wednesday, July 3, 2019


தமிழ் இனத்தின் விடுதலையை மாத்திரம் உயிராக நினைத்துப் போராடிய விடுதலைப்புலிகளுடன் போதைப் பொருளை தொடர்புபடுத்தி ஐனாதிபதியோ, வேறு யாரும் தரக்குறைவாக பேச முடியாது. அவ்வாறு பேசுவது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகவே நான் பார்க்கிறேன் என இன்று (3) பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தனது ஊடக அறிக்கையில் கூறியுள்ளார் .

மேலும் அவர் இது பற்றி கூறுகையில்,

உயிரை துச்சமாக மதித்து, கழுத்திலே நஞ்சுக் குப்பியை அணிந்து கொண்டு போராடிய விடுதலைப்புலிகள் வாயில் புகைத்தலையோ, மதுவையோ, விளையாட்டாகவும் வைத்து பார்க்காதவர்கள். அவர்கள் கனவிலும் போதை பற்றி நினைத்து பார்க்காதவர்கள். இன விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டவர்கள். அவர்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் சாதாரண போதைப் பொருள் பாவனைக்கே இடமளிக்காதவர்கள். அவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்தார்கள் என்ற கருத்தை துளியளவும் ஏற்க முடியாது.

புலம்பெயர் உறவுகளின் உழைப்பும், அது மாத்திரமல்ல விடுதலைப் புலிகள் தங்களுக்கு தேவையான உணவு சார்ந்த பொருள்கள் உட்பட பலவற்றை தாங்களே உற்பத்தி செய்து தாயாரித்தும் பெற்றுக்கொண்டார்கள். விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ்ப் பகுதிகளில் போதைப்பாவனை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்தது . தவறி யாராவது சாதாரண போதைப் பொருள் பாவனையில் பாவித்தாலும் அவர்களும் கட்டுப்படுத்தப்பட்டார்கள். ஆகவே ஐனாதிபதி மட்டுமல்ல யாருமே விடுதலைப் புலிகள் மீது போதை என்ற சொல்லையே பயன்படுத்த முடியாது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

logoblog

Thanks for reading புலிகளுடன் போதைப்பொருளை தொடர்புபடுத்தி ஜனாதிபதியும் பேச முடியாது!

Previous
« Prev Post