onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Tuesday, July 30, 2019

மின்னஞ்சலை தவறாக விளங்கிவிட்டீர்கள்; நமக்குள்ளே மோதுவது அநாகரிகம்; அள்ளக்கைகளை வைத்து அலப்பறையில் ஈடுபடாதீர்கள்: முன்னணிக்கு அருந்தவபாலன் அறிவுரை!

  admin       Tuesday, July 30, 2019


விக்னேஸ்வரனால் மின்னஞ்சல் தகவல் மூலம் தலைமைப்பதவி தரப்பட்டதாக கஜேந்திரகுமார் கூறி வருவதை அருந்தவபாலன் நிராகரித்ததுடன், அவர் மின்னஞ்சலை தவறாக விளங்கியிருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சிகளின் கூட்டணியில், தனக்கு விருப்பமான ஒருவரிடம் தலைமைப்பதவியை விக்னேஸ்வரன் எப்படி தன்னிச்சையாக கொடுக்கலாமென்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தனிப்பட்டவர்களிற்கிடையிலான மின்னஞ்சல்களை வெளியிடுவதே அநாகரிகம், மின்னஞ்சலை வெளியிட்டதுமல்லாமல், கட்சியின் அள்ளக்கைகள் மூலம் சமூக ஊடகங்களில் போலிப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதையும் கண்டித்துள்ளார்.

இன்று இரவு அருந்தவபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த சனிக்கிழமை நடந்த ஊடகவியளாலர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி, “விக்னேஸ்வரன் ஐயாவிற்கு பின்னர் கூட்டுக்கட்சிகளின் தலைமைப்பதவி தமக்கு தரப்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்டதாகவும், அந்த பதவியை தருவதாக விக்னேஸ்வரன் எழுத்தில் கொடுத்ததாக அவர்கள் கூறுகிறார்கள் இது உண்மையா?“ என்பதே.

அதற்கு என்னுடைய பதில்- அவர்கள் அவ்வாறு கேட்கவுமில்லை. நாங்கள் அப்படி வழங்கவுமில்லை என்பதாகும்.

இதுதான் உண்மை நிலை. கஜேந்திரகுமார் கூறுவது போல நாம் பொய் கூறவுமில்லை. எமக்கு பொய் கூற வேண்டிய அவசியமில்லை.

சிலவேளைகளில் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பாக, விக்னேஸ்வரனால் கஜேந்திரகுமாருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலிலுள்ள விடயங்களை அவர்கள் தவறாக புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்குப்பின் தலைமைப்பதவியை தருவதாக கஜேந்திரகுமாருக்கு கூறவில்லையென்பதே உண்மை.

இதற்கு மேலாக பல கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கவுள்ள ஒரு கூட்டணியின் தலைமை பதவியை தனக்குப்பின் தான் நினைத்த ஒருவருக்கு விக்னேஸ்வரன் எப்படி தன்னிச்சையாக வழங்க முடியும்? அது கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவல்லவா? இந்த சாதாரண விடயம் கூடவா தெரியாமல் போய்விட்டது?

மேலும், தனிப்பட்டவர்களிடையே பரிமாறப்படும் அஞ்சல்- அதுவும் மிக இரகசியமானவை என வரையப்படுபவற்றை ஊடகங்களில் வெளியிடுவது எத்தனை நாகரிகமானது?

தவிர்க்க முடியாதவாறு அதை வெளியிட வேண்டிய தேவையேற்பட்டால், சம்பந்தப்பட்டவர்களே அதை வெளியிட வேண்டும். அதுவும் முழுமையாக வெளியிடப்பட வேண்டும். அதற்கு மாறாக தமக்கு ஏற்றவாறு மக்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே துண்டுதுண்டாக வெளியிடுவதும், அதனை தமது அள்ளக்கைகளை கொண்டு சமூக ஊடகங்களில் வெளியிடுவதும் கீழ்த்தரமான செயல்களாகும்.

மேலும், நாம் ஒத்த கொள்கையுடையவர்களை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் பொது எதிரியுடன் மோத வேண்டிய சூழ்நிலையில், எமது சுயநல அரசியல் போக்கில் நமக்குள்ளே முட்டி மோதுவது, நம் மக்களுக்குத்தான் மிகவும் பாதகமாக அமையும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

எனவே இனிவரும் காலங்களில் இப்படியான கருத்தாடல்களில் ஈடுபடுவதை விடுத்து, மக்களுக்கு ஆரோக்கியமான விடயங்கள் தொடர்பாகவே கருத்தாடல் செய்ய எமது கட்சி விரும்புகிறது“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மின்னஞ்சலை தவறாக விளங்கிவிட்டீர்கள்; நமக்குள்ளே மோதுவது அநாகரிகம்; அள்ளக்கைகளை வைத்து அலப்பறையில் ஈடுபடாதீர்கள்: முன்னணிக்கு அருந்தவபாலன் அறிவுரை!

Previous
« Prev Post