onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, July 29, 2019

நகுலேஸ்வரத்து மிகப்பெரிய நந்தி இறையடி சேர்ந்தது ( கீரிமலை ) படங்கள் இணைப்பு!

  admin       Monday, July 29, 2019



 கீரிமலை நகுலேஸ்வரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டுவந்த நந்தி ( காளை மாடு ) நேற்று முன்தினம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 . 00 மணி யளவில் இப் பூவுலகு விட்டேகியது . 


நல்லின மாட்டின் இனப் பெருக்கத்திற்காக திருநெல்வேலி கால் நடை வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டுவந்த பிரஸ்தாப காளைமாடு ஏலத்தில் விற்கப்பட்ட போது , அதனை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வாங்கியிருந்தார் . அதனை இறைச்சிக்காக வெட்டு வதற்கு முன்பாக , காளை மாட்டின் படத்துடன் துண்டுப்பிரசுரம் அச்சக்கணக்கான சிட்டு வெளியிட்டதுடன் காளை மாட்டை கண்காட்சிபடுத்தியுமிருந்தார் . இதனையடுத்து , காளை மாடு கதறுவது கேட்கவில்லையோ என்று வலம்புரி நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியிருந்தது . 


ஆசிரியர் தலையங்கம் எழுதப் பட்டதையடுத்து காளை மாட்டை வெட்டுவதற்கு அன்றைய யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தடைவிதித்தார் . தொடர்ந்து யாழ்ப்பாண நீதி மன்றில் வழக்கு நடைபெற்ற நிலை யில் , குறித்த காளை மாட்டை யாழ் . வர்த்தக சங்கம் கொள்வனவு செய்து கீரிமலை நகுலேஸ்வரத் தில் வைத்து பராமரிக்குமாறு நீதி ! பதி ம . கணேசராசா தீர்ப்பளித்ததை யடுத்து 02 . 05 . 2012 அன்று காளைமாடு கீரிமலை நகுலேஸ் வரத்துக்கு கொண்டு சென்று விடப் பட்டது . 


கடந்த ஏழு வருடங்களாக இலட் அச்சக்கணக்கான பக்தர்களின் தரிசனத்தில் திற்குரிய நந்தியாக இருந்த காளை மாடு நேற்று முன்தினம் 28ஆம் திகதி பிற்பகல் 3 . 00 மணியளவில் இப் பூவுலகை விட்டேகியது .


 இறையடி எய்திய நந்திக்கு அபிஷேகம் இடம்பெற்று , வெண் ணீறு பூசி , வெள்ளைநிற ஆடைகள் விரிக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதி , கீரிமலை புண்ணிய பூமியில் சமாதி வைக்கப்பட்டது . கீரிமலை நகுலேஸ்வரத்தில் இதுகாறும் காட்சியளித்த நந்தி யின் மறைவு பக்தர்கள் பலரையும் வேதனைப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது 





logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நகுலேஸ்வரத்து மிகப்பெரிய நந்தி இறையடி சேர்ந்தது ( கீரிமலை ) படங்கள் இணைப்பு!

Previous
« Prev Post