Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 31 ஜூலை, 2019

கிளிநொச்சி இரட்டை கொலையாளி சிக்கினார்; கொலைக்கான காரணம் இதுதான்!

  admin       புதன், 31 ஜூலை, 2019


கொலையுண்டவர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் உச்சத்தில் தான் தாக்கப்பட்டதாகவும், அந்த அவமானத்தை பொறுக்க முடியாமல் கொலையை செய்ததாக தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்களின் வீட்டுக்குள் புகுந்து கம்பி ஒன்றினால் இளைஞனை தாக்கியதாகவும் இதனை அவரது தாயார் கண்டமையால் அவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் பொலிசாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்

இந்நிலையில் குறித்த சம்பவம் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்னம் ஜெசிந்தன் மற்றும் அவரது குழுவினர், தடயவியல் பொலிசார் சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றை இறைத்து சோதனை செய்த பொழுது இறந்தவரின் கைத்தொலைபேசி ஒன்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கம்பி ஒன்றும் பொலிசாரால் மீட்கப்படுள்ளன.

அத்துடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்







logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கிளிநொச்சி இரட்டை கொலையாளி சிக்கினார்; கொலைக்கான காரணம் இதுதான்!

Previous
« Prev Post