Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 6 ஜூலை, 2019

ஸ்ரீலங்காவையே படுகுழியில் தள்ளும் இன அழிப்பு திட்டமிடல் அம்பலம்!

  admin       சனி, 6 ஜூலை, 2019



ஏறாவூரில் பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதலின்போது 27 அரசாங்க திணைக்களங்களின் போலி இறப்பர் முத்திரைகள், பிறிண்டர் , மடிக்கணனி மற்றும் ஆவணங்களுடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர்ப்பற்று, பதியதலாவ பிரதேச செயலாளர்களது உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகள், பெரியபுல்லுமலை, மரப்பாலம், கரடியனாறு, வேப்பவெட்டுவான் போன்ற பிரதேசங்களுக்கான கிராம அலுவலர்களின் உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகள், பல்வேறு பிரதேச வன திணைக்கள அதிகாரிகளின் இறப்பர் முத்திரைகளும் இங்கு காணப்பட்டுள்ளன.

மேலும் விண்ணப்பப்படிவங்கள் உள்ளிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிடிபட்ட இறப்பர் முத்திரைகளை பயண்படுத்தி எத்தனை சட்டவிரோத வேலைகளை செய்திருப்பார்கள் என்று அச்சம் வெளியிடும் தமிழ் ஆர்வலர்கள், இந்த இறப்பர் முத்திரைகளுடன் தொடர்புபட்ட அத்தனை அனுமதிகளும் மீளாய்வு செய்யப்பட்டு தடைசெய்யப்பட வேண்டும்; இதே போன்று அம்பாறை, திருகோணமலை பகுதிகளிலும் இத்துறை சம்பந்தமாக இஸ்லாமிய பகுதிகளில் அதிரடி நடவடிக்கை செய்யப்படவேண்டுமென தெரிவித்துள்ளனர்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஸ்ரீலங்காவையே படுகுழியில் தள்ளும் இன அழிப்பு திட்டமிடல் அம்பலம்!

Previous
« Prev Post