Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 25 ஜூலை, 2019

பாசிக்குடாவில் பறிபோகப்போகும் முருகன் ஆலயம்!

  admin       வியாழன், 25 ஜூலை, 2019


இலங்கையில் பிரசித்தி பெற்ற இடம் மட்டக்களப்பில் உள்ள பாசிக்குடாவாகும் இப்பாசிக்குடா உல்லாச சுற்றுலா துறைக்கும் பெயர் பெற்றதுபோல பல வரலாற்று நிகழ்வுகளுக்கும் பெயர் பெற்றது இந்தவகையில் பாசிக்குடா பொதுமக்கள் குளிக்கும் கடற்கரைக்கு நேர் எதிரே உள்ள பெரிய கடற்கரைக்கும் இடைய ஒரு முனைப்பகுதி உள்ளது அந்த முனைப்பகுதி இறுதியில் அமைந்துள்ளது ஒரு முருகன் கோயில் 
ஆம் 
இதை
முனை முருகன் கோயில் என்று அழைப்பர் இந்த கோயிலில் இருந்து ஒரு 150 m அளவில் போத்துக்கீசர் கப்பல்களுக்கு சைகை காட்டும் வெளிச்ச் வீட்டுக்கு இணைவான ஒரு கட்டிடத்தையும் அமைத்திருந்தனர் இப்போது சுனாமியில் அழிந்துவிட்டது.

அக்காலம் தொடக்கமே நம்மவர்கள் இந்த கோயிலை அமைத்து வழிபட்டு வந்ததுடன் பல வெளிநாட்டவர்களும் இந்த கோயிலில் வழிபட்டு காரியங்களை சாதித்ததாக வரலாறுகளும் உண்டு அத்தோடு நாக வழிபாடும் செட்டைகள் கொண்ட பாம்புகள் இக்கோயிலின் மேலாக பறந்து செல்வதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது நேர்த்திக்கு கல்லை கட்டிச்சென்று,வந்ததும் கல்லை அவிழ்த்து நேற்றியை நிறைவேற்றுவதும் உண்டு 
இதை கேள்வி உற்ற சிங்களவர்களும் தற்போது இந்த கோயிலுக்கு சென்று நேர்த்தி கல்லை கட்டிவிட்டு செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.

இப்போது இங்கு பிள்ளை இல்லாத சிங்களவர்கள் பலர் வந்து நேற்றி வைத்து கல்லை கட்டும் வழக்கம் ஆரம்பித்துள்ளது 

வரலாற்று சிறப்புமிக்க பாசிக்குடா இன்று சகோதர மொழி அன்பர்களுக்கு சொந்தமான ஹொட்டேல் களாலும் உல்லாச பயணிகளான சகோதர மொழி அன்பர்களாலும் நிரம்புவதால் இந்த கோயிலுக்கு அவர்களின் வருகையும் அதிகமாக உள்ளது நேர்த்தி கடன்களும் அதிகளவில் வைக்கப்படுகிறது அதை விட இக்கோயிலில் இருந்து 150 m அளவில் ஒரு கடற்படை முகாமும் உள்ளது.

இந்தநிலையில் இக்கோயிலானது கட்டப்பட்டு இது அறைகுறையில் கிடக்கிறது இதன் பின் மேலும் கட்டட பணிகள் நடப்பதாக இல்லை இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த நிலையிலேயே இருக்கின்றது.

இவ்வாறே நிலைமை தொடர்ந்தால் முருகனுக்கு துணையாக அவ்விடம் ஆசையை துறந்தவர் சிலை ஒன்று வருவதற்கு  வெகுகாலம் எடுக்காது.

நீங்களே பார்க்கலாம் இவ்வளவு நபர்கள் உலாவும் இடத்தில் வைக்கப்பட்ட சில்லறைக்காசுகள் நம் பில்லிகளால் எடுபடாமல் இருக்குதென்றால் அங்கு உலாவும் பாம்பு கதைகளே காரணம்.

சிலை வரமுன் நடவடிக்கை எடுக்க போகிறோமா அல்லது வைத்தபின் அதை காலா காலத்துக்கு கதைக்க போகிறோமா ????

ஒரு இனம் வாழ்ந்ததற்கான ஆதாரங்களே சமைய கலை கலாச்சார சின்னங்களே 
அவற்றை அழிய விட்டுவிட்டு அங்கு வாழ்ந்தோம் இங்கு வாழ்ந்தோம் என்பதில் என்ன பயன்.

எல்லோரும் ஒன்று பட்டு நமது பாரம்பரிய கலைச்சார அடையாளங்களை பாதுகாப்பது நமது எலோரினதும் கடமை உங்களால் ஏன்ற உதவிகளை செய்து இவ் ஆலயத்தை மிக குறிய காலத்தில்  புணர்த்தானம் செய்வோம் 

அதிகமாக எல்லோரும்   share பண்ணவும் .

நன்றிlogoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பாசிக்குடாவில் பறிபோகப்போகும் முருகன் ஆலயம்!

Previous
« Prev Post