onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Sunday, July 14, 2019

இந்தவருடத்தின் இறுதி அதிசய நிகழ்வு! காணத் தவறாதீர்கள்

  admin       Sunday, July 14, 2019


இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணம் எதிர்வரும் ஜூலைமாதம் 16 ஆம் திகதி செ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் ஏற்படவுள்ளது. அத்துடன் தற்செயலாக இந்த சந்திர கிரகணம்அப்பல்லோ விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய நாளில் வருவதும் சிறப்பம்சமாகும்.

இந்த சந்திர கிரகணத்தை அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பா ,ஆசியா கண்டங்களில் காணமுடியும்.எனினும் வட அமெரிக்காவில் தெரியாது.

இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். அடுத்த சந்திர கிரகணம் 2020 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதி நடைபெறும் என கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர்சந்தன ஜெயரத்ன தெரிவித்தார்.

இந்த சந்திர கிரகணம் ஜூலை 16ஆம் திகதி நள்ளிரவு 12.13 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் 17 ஆம்தகதி அதிகாலை 5.47 மணிக்கு நிறைவுபெறும்.

17 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் சந்திரனின் மேற்பரப்பில் சுமார் 65 வீதம் இருண்ட நிழலால் மிகப்பெரிய கிரகணத்தைச் சுற்றியிருக்கும் என்று பேராசிரியர்சந்தன ஜெயரத்ன தெரிவித்தார்.

கிரகணத்தின் இரவில் சந்திரனுக்கு அருகில் சனியையும் அதற்கு அடுத்து வியாழனையும் காண முடியும் என்று பேராசிரியர் ஜெயரத்ன மேலும் கூறினார்.

logoblog

Thanks for reading இந்தவருடத்தின் இறுதி அதிசய நிகழ்வு! காணத் தவறாதீர்கள்

Previous
« Prev Post