onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Friday, July 5, 2019

மைத்திரி, ரணில், மஹிந்த, கோட்டாப ஆகியோர் தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும்- பொன்சேகா

  admin       Friday, July 5, 2019


நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்கள் பலரிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டதன் பின்னரேயே கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் நிறைவடையும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரனில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் உள்ளிட்ட இன்னும் பலரை சாட்சியமளிக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்கவுள்ளோம்.

தயாசிறி ஜயசேகர தெரிவுக் குழுவுக்கு வர மறுப்புத் தெரிவித்துள்ளார் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொன்சேகா, அவர் வர மறுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் எனக் கூறினார்.

மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

logoblog

Thanks for reading மைத்திரி, ரணில், மஹிந்த, கோட்டாப ஆகியோர் தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும்- பொன்சேகா

Previous
« Prev Post