onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Sunday, July 28, 2019

தமிழர்கள் உட்பட கோடிக்கணக்கான பல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய சிறுமியின் திடீர் மரணம்; யாரந்த சிறுமி!

  admin       Sunday, July 28, 2019



இளம் வயதிலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்த மலையாள குழந்தை பிரபலமான ஆருணி பன்றிக் காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான, குழந்தை நட்ஷத்திரமுமான கேரளாவைச் சேர்ந்த ஆருணி. பெரிய கண்களுடன் அபிநயம் காட்டும் முகபாவனைளுடன் கூடிய 9 வயதான இந்தச் சிறுமியின் டிக்டாக் பாடல்களுக்கு உலகம் முழுவதும் மொழிகளை கடந்து ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர்.

மலையாளத்தில் வெளியான பழைய புதிய பாடல்களை தனது முகபாவனைகள் மற்றும் கண் அசைவுகள் மூலம் வெளியிட்டு ஆயிரமாயிரம் ரசிகர்களைக் கொண்ட ஆருணி தமிழர்களுக்கும் மிகவும் பரீட்சித்தமானவர்.

டிக் டாக்கில் கலக்கிவந்த இந்த சிறுமி, தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து மிகப்பெரும் நடிகையாக வருவார் என எதிர்பார்த்திருந்தனர் அவர்களது ரசிகர்கள்.

இந்த நிலையில் கடுமையான தலைவலி காரணமாக திருவனந்தபுரம் எஸ் ஐ டி மருத்துவமனையில் ஆருணி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆருணி வியாழக்கிழமையன்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் பலருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தமிழர்கள் உட்பட கோடிக்கணக்கான பல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய சிறுமியின் திடீர் மரணம்; யாரந்த சிறுமி!

Previous
« Prev Post