onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, July 29, 2019

மக்களின் பிரச்சனைகளில் கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை; வாகன பொமிற்றே இலக்கு: யாழில் நாமல் நீலிக்கண்ணீர் வடித்தார்!

  admin       Monday, July 29, 2019


வடகிழக்குமாகாணங்களில் 30 வருடங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றளவும் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றவர்கள் நாடாளுமன்றத்தில் மக்களுடைய  பிரச்சனைகளை பேசுவதில்லை. அவர்கள் வாகனப் போமிற் எடுப்பது போன்ற தமது சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலையே அக்கறையாக இருக்கின்றனர்.

மேற்கண்டவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாகச் சாடியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் அரசாங்கமும் அக்கறையுடன் செயற்படவில்லை என்றும், ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஹெலிகெப்ரர்களில் வருகிறார்கள் போகிறார்கள், மக்களின் பிரச்சனைகளைப் பார்ப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் நன்றி கெட்டவர்கள் அல்ல. அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஐன பெரமுனவின் யாழ்.மாவட்டகாரியாலாயத்தில் அக் கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,

கடந்த 30 வருடங்கள் வடகிழக்கு மக்களும், தெற்கில் வாழ்ந்த மக்களும் சொல்லணா துன்பங்களை அனுபவித்தனர். அதனை நாங்கள் மீண்டும் மீண்டும் பேசிகொண்டிருப்பதால் பயன் எதுவும் இல்லை. நாம் எமது எதிர்கால சந்ததியை வளப்படுத்த வேண்டும். ஒருகாலத்தில் யாழ்ப்பாணம், மன்னார்மாவட்டங்களில் தரமான பாடசாலைகள் இருந்தது.

ஆனால் இங்கிருந்த அரசியல்வாதிகள் அந்த தரமான பாசாலைகளின் கல்வியை சீர்லைத்து இளைஞர்,யுவதிகளை போருக்குள் தள்ளினார்கள். இன்று அவ்வாறன நிலை இல்லை. இன்று இங்குள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. தொழில் இல்லை. வங்கிகளில் கடன் பெறமுடியாத நிலை,
தமது உற்பத்திகளை விற்பனை செய்ய இடமில்லை. மீனவா்களுக்கு பல பிரச்சினைகள், கூலிவேலை செய்பவர்களுக்கும் பல பிரச்சினைகள் இதற்கு மேலாக பட்டதாரிகளுக்கு வேலையில்லை. பாடசாலைகளில் ஆசிரியர்ள் இல்லை. தமிழ்பேசும் பொலிஸார் இல்லை. மருத்துவர் இல்லை. மருந்துகள் இல்லை. பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பிள்ளைகளுக்கும் நஞ்சை கொடுத்து தானும் நஞ்சு சாப்பிட்டு சாகும் நிலை இங்கே இருக்கின்றது.

இவை தொடர்பாக இந்தபகுதி மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் பேசுவது கிடையாது. அவர்களுடைய இலக்கு நாடாளுமன்றம் செல்வதும், வரிவிலக்களிக்கப்பட்ட வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதும் மட்டுமேயாகும். ஜனாதிபதி, பிரதமரும் கூட அவ்வாறே ஹெலிகொப்டரில் வருகிறார்கள். ஹெலிகொப்டரில் போகிறார்கள். மக்களுடைய பிரச்சினைகளை பார்ப்பதில்லை.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது இங்குள்ள மக்களின் பிரச்சினைகள், தேவைகளை அறிந்து கொள்வதற்காக அலுவலகம் ஒன்றை திறந்தார். ஆனால் இங்குள்ள நாடாளுமன்றஉறுப்பினர்கள் அதனையும் இழுத்து மூடினார்கள். போருக்கு பின்னர் பாரிய வீதிகளை அமைத்ததும், பாலங்களை திறந்தது, புகையிரத பாதைகளை அமைத்தது மஹிந்த ராஜபக்சதான்.

ஆனால் இன்றுஅவ்வாறான அபிவிருத்திகளை காணவில்லை.
நாங்கள் அவ்வாறு அபிவிருத்திகளை செய்தபோது இங்குள்ள மக்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் ஆகவே அத்தகைய அபிவிருத்திகளை இங்கு செய்யாதீர்கள் என்றும் இங்குள்ள சிலர் எங்களிடம் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் நாங்கள் பல அபிவிருத்திகளைச் செய்தோம். மக்களுடைய வாக்குகளை வாங்குவது மட்டும் எங்களுடைய இலக்கல்ல.

தமிழ் மக்கள் நன்றிகெட்டவர்களும் அல்ல. நாங்கள் தமிழ் மக்களைநம்புகிறோம். அடுத்துவரும் ஆட்சி எங்களுடையஆட்சியாக நிச்சயம் அமையும். அதில் இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மக்களின் பிரச்சனைகளில் கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை; வாகன பொமிற்றே இலக்கு: யாழில் நாமல் நீலிக்கண்ணீர் வடித்தார்!

Previous
« Prev Post