Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 28 ஜூலை, 2019

சொந்த மகளையே சீரழித்த கிளிநொச்சி தந்தை: வலைவீசி தேடும் பொலிசார்!

  admin       ஞாயிறு, 28 ஜூலை, 2019


கிளிநொச்சியில் தனது சொந்த மகளையே பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிய தந்தை தலைமறைவாகியுள்ளார். அவரை வலைவிரித்து பொலிசார் தேடி வருகின்றனர்.

கிளிநொச்சி பரந்தன் சிவபுரத்தை சேர்ந்த 13வயதான சிறுமியே, தனது தந்தையால் சீரழிக்கப்பட்டவர். சிறுமி சீரழிக்கப்பட்டதையடுத்து, கடந்தவாரம் தனது தாயாருடன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சென்று இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்தார்.

தாயார் வேலைக்கு சென்ற பின்னர், சிறுமியை அச்சுறுத்தி வன்புணர்விற்குள்ளாக்கியுள்ளார் தந்தை. மூன்று தடவைகள் தந்தையார் தன்னை வன்புணர்விற்குள்ளாக்கியதாக சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

மருத்துவ பரிசோதனையிலும் சிறுமி சீரழிக்கப்பட்டது உறுதியானது.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கிளிநொச்சி பொலிசாரால் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாகியுள்ள தந்தையாரை தேடி வருவதாகவும், நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு அவர் பற்றிய தகவலை வழங்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சொந்த மகளையே சீரழித்த கிளிநொச்சி தந்தை: வலைவீசி தேடும் பொலிசார்!

Previous
« Prev Post