Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 26 ஜூலை, 2019

ஒருத்தர் யானை தாக்கி சாவது எப்படி இன அழிப்பாக இருக்க முடியும்?

  admin       வெள்ளி, 26 ஜூலை, 2019


2009 இலிருந்து யானைகளை இன அழிப்பின் ஒரு கருவிகளாக சிங்களம் பயன்படுத்தும் என்று நாம் தொடர்ச்சியாக எச்சரித்தபோது நக்கலடித்தவர்கள்தான் ஏராளம்.

அப்படி நக்கலடித்தவர்களில் ஒருத்தர் திடீரென்று நேற்று தொடர்புக்கு வந்து 'இப்போதுதான் சிலது புரிகிறது. யானைகள் தொடர்பான உங்கள் ஆய்வுகளைத் தருகிறீர்களா? மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்கிறார்.

என்னத்தைச் சொல்லி.. புரிய வேண்டிய நேரத்தில் புரியாமல் விட்டுவிட்டு எல்லாம் கையை விட்டுப் போய்கொண்டிருக்கிற நேரத்தில் வந்து நின்றால் என்ன செய்வது?

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திரியாயில் யானை தாக்கி ஒரு பெண்மணி கொல்லப்பட இன்னொருத்தர் படுகாயம் அடைந்திருக்கிறார்.

விளைவாக அவர்கள் குடும்பத்தினர் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல்.

இதுதான் இன அழிப்பு.

ஒருத்தர் யானை தாக்கி சாவது எப்படி இன அழிப்பாக இருக்க முடியும்?

விளக்கம் இதுதான். யானைகள் அதிகம் நடமாட்டமில்லாத இடத்தில் எப்படி திடீரென்று யானைகள் வர முடியும்? வேறு ஒரு பகுதியிலிருந்து கொண்டுவந்து விடப்பட்டது என்பதே உண்மை. குறிப்பாக தமிழீழ எல்லையோரக்கிராமங்களில் இது நடக்கிறது. இதன் விளைவாக மக்கள் அங்கிருந்து வெளியேறவோ அல்லது அங்கு தமது விவசாய நிலங்களையோ கைவிட நேரிடும். இதை பயன்படுத்தி அந்த நிலங்களை அரசுக்கு சொந்தமான காட்டு இலாக்காவிற்குள் கொண்டுவரும் முயற்சி இது.

அல்லது யானைகளை விரட்ட – மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தல் என்ற பேரில் படைமுகாம்களை நிறுவுவார்கள். குறிப்பிட்ட காலத்தில் அது நிரந்தரமாகவே பறிபோகும். சிங்கள குடியேற்றங்களை செய்ய சிங்களம் கையாண்டிருக்கும் புதிய இன அழிப்பு உத்தி இது.

நிலத்தையும் பறிகொடுத்து தமது வாழ்வாதாரங்களையும் இழந்து வெளியேறும் மக்கள் புதிதாக இன்னொரு தமிழர் பகுதிக்குள் குடியேறுவதால் நிகழும் வாழ்வியல் பொருண்மிய மாற்றங்கள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தொடர்ந்து அந்த சமூகத்தில் பிரதிபலித்துக்கொண்டேயிருக்கும்.

“போர் முடிந்து விட்டதால் யானைகள் கிராமங்களுக்குள் வருகின்றன ” என்று கிழக்கு மாகாணசபை அமைச்சர் ஒருவர் அண்மையில் இதற்கு ஒரு காரணம் கூறியிருந்தார்.

“யானைகள் எப்படி தமிழர்கள் இருக்கும் எல்லையோரப் பகுதியை நோக்கி மட்டும் வருகின்றன?” என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல தயார் இல்லை..

தற்போது வன்னி எல்லையோரக்கிராமங்களிலும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுவதன் பின்னணியும் இந்த இன அழிப்பு உத்திதான்..

எல்லையோர கிராமங்களை நாம் இழப்பது வடக்கு கிழக்கு இணைந்த எமது தாயக தேசிய கோட்பாட்டையே சிதைத்துவிடும் பேராபத்து நிறைந்தது.
இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
நன்றி பரணி

அத்தனையும் அப்பட்டமான உண்மை. 
தமிழர்களின் நிலம்சார்பான பொருளாதாரங்களை அழித்து நாசம் செய்வதற்கும், மக்கள் மீள்குடியேறுவதை அச்சுறுத்துவதன்மூலம் தடுத்து நிறுத்துவதற்குமாகவென திட்டமிட்டு, முன்னோடி வளர்ப்பு யானைகளை கொணர்ந்து விட்டு காட்டுயானைகளை கூட வரவழைத்து கிராமங்களுக்குள் ஏவிவிடுகிறார்கள். இதுபற்றிய இன்னும் பலமான ஆதாரங்களுடனான எனது ஆய்வு தகவல்களையும் மிக விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஒருத்தர் யானை தாக்கி சாவது எப்படி இன அழிப்பாக இருக்க முடியும்?

Previous
« Prev Post