onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, July 25, 2019

சிறுமியை கடத்த முயன்ற நபர் நையப்புடைப்பு!

  admin       Thursday, July 25, 2019


சிறுமியை கடத்திச் செல்ல முயற்சித்த ஆசாமியை பிரதேச மக்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர். பின்னர் அவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கண்டி – தல்வத்தை பகுதியை சேர்ந்த 9 வயதான சிறுமியே கடத்தப்பட்டார். உடதலவின்ன பகுதியை சேர்ந்த 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.

கடந்த நான்காம் திகதி குறித்த சிறுமி பாடசாலை நிறைவடைந்து மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, குறித்த நபர், சிறுமியின் தாய் நகரில் இருப்பதாகவும் தாம் அங்கு அழைத்து செல்வதாகவும கூறி அவரை உந்துருளியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

எனினும் சந்தேக நபர் சிறுமியை விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட சிறுமி வீதியை நோக்கி ஓடியுள்ளார்.

பின்னர் வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தியுள்ள சிறுமி சம்பவம் தொடர்பில் அதன் சாரதிக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி தாயிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், தாய் சம்பவம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காணொளிகளை பரிசோதனை செய்து சந்தேக நபரை இனங்கண்டுள்ளார்.

பின்னர் தனது வீட்டில் கூலி வேலை இருப்பதாக குறித்த நபரை ஏமாற்றி தமது வீட்டுக்கு அழைத்துள்ள சிறுமியின் தாய், அவரை பிரதேசவாசிகளுடன் இணைந்து மடக்கி பிடித்துள்ளார். அவரை ஊர் மக்கள் நையப்புடைத்தனர். பின்னர், கண்டி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சிறுமியை கடத்த முயன்ற நபர் நையப்புடைப்பு!

Previous
« Prev Post