Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 2 ஜூலை, 2019

தாக்கவுமில்லை; கைது செய்யப்படவுமில்லை: முல்லை விவசாய பணிப்பாளர் தன்னிலை விளக்கம்!

  admin       செவ்வாய், 2 ஜூலை, 2019


கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து வுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர், தன்னால் தாக்கப்பட்டதாகவும், தன்னை பொலிஸார் கைதுசெய்தாக கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை என முல்லைத்தீவு பிரதி விவசாய பணிப்பாளர் கோபாலப்பிள்ளை உகநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த செய்திகளால் தனது சுய கௌரவம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

கடந்த 27ஆம் திகதி தான் தாக்கியதாக, வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இந் நிலையில் பொலிஸார் தன்னை அழைத்து வாக்குமூலம் பெற்றனர். ஆனால் தான் கைதுசெய்யப்பட்டது, நான் அவரைத் தாக்கியது என்பதெல்லாம் முற்றிலும் பொய்யெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரச மற்றும் வதிணைக்களங்கள் சார்ந்த விடயங்களைப் பற்றி நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.

மேலும் அண்மைக் காலத்தில், எனது சுய கௌரவத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் ஊடகங்களில் வந்த செய்திகளை நான் முற்றிலும் மறுக்கின்றேன்.

வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் என்னால் தாக்கப்பட்டதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நான் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானது.

உண்மையான விடயங்களைத் திசைதிருப்பும் நோக்கோடு, இதனோடு சம்பந்தப்பட்ட சிலர் ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கியிருக்கின்றன.

மேலும் இது சம்பந்தமாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் தனிப்பட்ட ஒருவருடைய கருத்தினை மாத்திரம் வெளியிடுவதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் தொடர்புகொண்டு இந்த செய்தியினை வெளியிட்டிருக்க வேண்டும்.

அந்தவகையில் எமது மாகாண விவசாயத் திணைக்களம், யாழ் வைத்தியசாலை நிர்வாகம், பொலிஸ்த் திணைக்களம் போன்றவற்றுடன் தொடர்புகொண்டு உண்மையான நிலைமைகளை அறிந்து, சரியான செய்திகளை வெளிவிட வேண்டும்.

எவ்வாறு தாக்கப்பட்டார், தாக்குதலுக்கு உள்ளாக்கப்படாரா, இல்லையா, என்பதற்கான ஆதாரங்கள் என்ன இருக்கின்றன என்பதைப் பார்த்து உண்மையான செய்திகளை வெளிவிட வேண்டுமென ஊடகங்களை மிக அன்பாக வேண்டுகின்றேன் என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தாக்கவுமில்லை; கைது செய்யப்படவுமில்லை: முல்லை விவசாய பணிப்பாளர் தன்னிலை விளக்கம்!

Previous
« Prev Post