Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 9 ஜூலை, 2019

செம்மலை நீராவியடிப்பிள்ளையார் தமிழர்திருவிழா ஏற்பாட்டுக்குழுவினரின் ஊடக அறிக்கை !

  admin       செவ்வாய், 9 ஜூலை, 2019


செம்மலை நீராவியடிப்பிள்ளையார் தமிழர்திருவிழாவினை நிறைவாக்கிய அனைத்து உறவுகளுக்கும் ஏற்பாட்டுக்குழுவினர்சார்பில் பேரன்புமிக்க நன்றிபாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஊடக அறிக்கை -

ஏற்பாட்டுக் குழுவினர்

பௌத்த மயமாக்கலினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் 108 பானைப் பொங்கலும் 06.07.2019 அன்றைய தினம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக வடக்கு, கிழக்கில் இருந்து வருகைதந்த ஆறு மாவட்டங்களின் மக்கள் திரளுடன் வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் "தமிழர் திருவிழா" எனும் தொனிப்பொருளில் 108 பானைப் பொங்கலுக்கு ஆலய அறங்காவலர் குழுவும் சமூகவலைத்தள நண்பர்களும் இணைந்து ஆலயத்தின் இருப்புக்காகவும், தமிழ் மக்களின் நிலவுரிமைக்காகவும் மதம் கடந்த தமிழராய் அணி திரளுமாறு தாம் விடுத்த வலியுறுத்தலை ஏற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான தமிழர்களின் பலத்தை காண்பிக்க தொலை தூரங்களில் இருந்தும் சிரமம் பாராது திரண்டுவந்த அத்தனை மக்களுக்கும் சிரம்தாழ்த்திய நன்றியை கூறிக்கொள்வதாக ஏற்பாட்டுக்கு குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில் மேலும், "பௌத்த மயமாக்காலினால் அழித்தொழிக்கப்படும் நிலையில் இருக்கும் பழைய செம்மலை, "நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் எமது தொன்மை, நீராவியடி மண் எமது சொந்த மண்" என்பதையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு காண்பிக்கும் நோக்கத்துடன் நல்லுள்ளங்களின் நிதி உதவியையும் பெற்று 108 பானைப் பொங்கலை வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கிறோம்.

அதற்காக ஒத்துழைப்பு வழங்கியவர்கள், உதவியளித்தவர்கள் மற்றும் எமது வலியுறுத்தலை ஏற்றுக்கொண்டு திரண்டுவந்த மக்களுக்கு நன்றியைக் கூறிக்கொள்ளும் அதேவேளை எமக்கு பூரண ஒத்துழைப்பை நல்கிய வடக்கு, கிழக்கு வாழ் உறவுகளுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்". என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கே நன்கொடையாளர்கள் விபரங்கள் மற்றும் கணக்கறிக்கைகள் காட்சிப்படுத்தப்படுகிறது.

திருகோணமலையிலுருந்து வருகைதந்த பேரூந்துக்கான செலவினை திரிகோணமலை வலைத்தள நண்பர்களும்,மன்னாரிலிருந்து வந்த பேரூந்துக்கான செலவினை மன்னார் வலைத்தள நண்பர்களும் 
வவுனியா ,யாழ்ப்பாணம்(2பேரூந்து)
,கிளிநொச்சி பேரூந்துகளுக்கான பொறுப்பினை உலகத்தமிழ் மாணவர்ஒன்றியத்தினரும் பொறுப்பேற்றிருந்தனர் 

உரிமைக்காய் கரம்கோர்த்து தமிழர்திருவிழாவினை நிறைவாக்கிய அனைத்து உறவுகளுக்கும் ஏற்பாட்டுக்குழுவினர்சார்பில் பேரன்புமிக்க நன்றிபாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாழ்க தமிழ்!





logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! செம்மலை நீராவியடிப்பிள்ளையார் தமிழர்திருவிழா ஏற்பாட்டுக்குழுவினரின் ஊடக அறிக்கை !

Previous
« Prev Post