onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Tuesday, July 30, 2019

குளவிக்கு பயந்து ஓடிய நோயாளர் காவு வண்டி; பின்னாலேயே அவலக்குரல் எழுப்பியபடி ஓடிய காயமடைந்த பெண் உயிரிழந்தார்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

  admin       Tuesday, July 30, 2019


சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினம் (28) குளவிக் கொட்டிற்கு இலக்காகிய நிலையில், இன்று உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்தார்.

மட்டுவில் தெற்கை சேர்ந்த க.ராஜலோஜினி (43) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணையில் உறவினர்களால் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி,

நேற்று முன்தினம் மாலை ரியூசனில் இருந்து பிள்ளைகளை அழைத்து வரும்போது, திடீரென குளவிகள் அவரை சூழ்ந்து குத்தியுள்ளன. அவரது முகம் முழுவதும் குளவிகள் மொய்த்ததால் அவரால் தப்பியோட முடியவில்லை. நிலத்தில் வீழ்ந்த அவரை குளவிகள் சரமாரியாக குத்தியுள்ளன.

அந்த பகுதியில் நின்றவர்களாலும் உடனடியாக அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக, 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டிக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தது நோயாளர் காவு வண்டி. எனினும், அவரை குளவிகள் மொய்த்திருப்பதை பார்த்து விட்டு, ஏற்றாமல் திரும்பி சென்றுள்ளனர். இதன்பின் சுதாகரித்த பெண், நோயாளர் காவு வண்டியின் பின்னால் கதறியபடி ஓடிச் சென்றதாகவும், தன்னை நோயாளர் காவு வண்டியில் ஏற்றும்படி அவலக்குரல் எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், பாதுகாப்பு கவசம் கொண்டு வரவில்லையென தெரிவித்தே நோயாளர் காவு வண்டியிலிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை.

பின்னர் அந்த பகுதி மக்கள் நோயாளர் காவு வண்டியை மறித்து நிறுத்தியுள்ளனர். பிரதேசவாசிகள் சிலர் சாக்கின் உதவியுடன் பெண்ணை மீட்டு, நோயாளர் காவு வண்டியில் ஏற்றி சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவரது கருவிலிருந்த 8 மாத சிசு உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் இன்று அவரும் உயிரிழந்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! குளவிக்கு பயந்து ஓடிய நோயாளர் காவு வண்டி; பின்னாலேயே அவலக்குரல் எழுப்பியபடி ஓடிய காயமடைந்த பெண் உயிரிழந்தார்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

Previous
« Prev Post