onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Wednesday, July 3, 2019

நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கலை குழப்பும் திட்டமா?: பிரமாண்ட பிரித் ஓதும் நிகழ்வு ஆரம்பம்!

  admin       Wednesday, July 3, 2019


இன்று முதல் விகாரையில் பிரித் ஓதும் நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலயம் பாரம்பரியமாக தமிழ் மக்களின் வழிபாட்டிடமாக இருந்து வருகிறது. எனினும், யுத்தத்தின் போது அங்கிருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். யுத்தத்தின் பின்னர் அந்த பகுதியில் மக்கள் மீள்குடியேறியபோது, நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இராணுவ பாதுகாப்புடன் விகாரையொன்று அமைக்கப்பட்டிருந்தது. குருகந்த ரஜமகா விகாரையென பெயரிடப்பட்ட அந்த விகாரை, தமது தொன்மையான வழிபாட்டிடத்திலேயே கட்டப்பட்டதாக பௌத்த பிக்குகள் தெரிவித்து வந்தனர்.

பல வருடங்களாக இரு தரப்பிற்குமிடையில் இந்த விவகாரத்தில் மோதல் நீடித்தது. அதிகார துணையுடன் பௌத்த பிக்குகள் பிரச்சனையை தூண்டும் விதமாக நடந்து வருவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆலயத்தின் பெயரையும் பௌத்த பிக்கு மாற்றி எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று இரு தரப்பும் அமைதியாக வழிபடலாமென நீதிமன்றம் உத்தரவிட்டது. பௌத்த பிக்குவினால் மாற்றப்பட்ட பெயரும், நீதிமன்ற உத்தரவுப்படி சீர்செய்யப்பட்டது.

இந்த நிலையில், வரும் 6ம் திகதி தமது மரபுரிமைகளையும், நில உரிமையையும் உறுதிசெய்யும் விதமாக 108 பானையில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட ஆலய நிர்வாகம், இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு, 108 பானையில் பொங்கல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை முதல் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள விகாரையில் பிரமாண்ட பிரித் ஓதும் நிகழ்விற்கு விகாராதிபதி திடீர் ஏற்பாடு செய்துள்ளார். இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை இந்த நிகழ்வு இடம்பெறும். இதற்காக தெற்கிலிருந்தும் சிகல ராவய உள்ளிட்ட அமைப்புக்களின் பௌத்த பிக்குகள் வரவழைக்கப்படவுள்ளதாகவும், பேருந்துகளில் ஆட்கள் ஏற்றிவரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


logoblog

Thanks for reading நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கலை குழப்பும் திட்டமா?: பிரமாண்ட பிரித் ஓதும் நிகழ்வு ஆரம்பம்!

Previous
« Prev Post