onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Thursday, July 11, 2019

“அரசுக்கு நாங்கள் ஆதரவளிப்பதை தமிழர்கள் விரும்பவில்லை” – சபையில் சம்பந்தன் காட்டம் !

  admin       Thursday, July 11, 2019


இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவு வழங்குவதை எமது மக்கள் விரும்பவில்லை.திருகோணமலை எனது வீட்டின் முன்னர் இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால் இந்த அரசை கவிழ்த்துவிட்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.”

அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ,

இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை விட கொஞ்சம் பரவாயில்லை. கடந்த ஆட்சியின் போது இருந்ததை விட இந்த அரசு மனித உரிமைகள் விடயத்தில் பரவாயில்லை. இந்த அரசை கவிழ்த்துவிட்டு நாம் என்ன என்ன செய்யப்போகிறோம். எனவே நாங்கள் கவனமாக செயற்பட வேண்டும்.

இன்று திருகோணமலையில் என் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்தது. எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை . இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவளிப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வடக்கு மக்கள் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதை முதலில் வேண்டும். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாங்கள் சரியான தீர்மானம் எடுப்போம் .- என்றார் சம்பந்தன்.

logoblog

Thanks for reading “அரசுக்கு நாங்கள் ஆதரவளிப்பதை தமிழர்கள் விரும்பவில்லை” – சபையில் சம்பந்தன் காட்டம் !

Previous
« Prev Post