onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Friday, July 26, 2019

காணி திருத்த சட்ட மூலம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது!

  admin       Friday, July 26, 2019


உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அரசாங்கத்தின் காணி விஷேட ஒழுங்கு விதிகள் திருத்த சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்மானத்தை இன்று நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி அறிவித்தார்.

123 ஆவது யாப்புடன் கூறப்படும் 120 ஆவது யாப்பு கூற்றுக்கு இந்த சம்பந்தப்பட்ட திருத்த சட்ட மூலம் மாகாண சபையின் பட்டியலில் விடயதானத்துக்குள் உள்ளடங்குவதாகவும் அரசியல் யாப்பின் 154 (உ) 3 சரத்துக்கு அமைவாக நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்துவதற்கு முன்னர் கருத்துக்ளை தெரிவிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதியினால் மாகாண சபைக்கு சமர்ப்பிப்பதை தவிர அதனை சட்டமாக ஆக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயர் நீதிமன்றம் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது 154 (உ) 3 யாப்பிற்கு உட்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக அல்லாத வகையில் திருத்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றம் இந்த சந்தர்ப்பத்தில் திருத்த சட்ட மூலம் தொடர்பில் ஏற்படுத்தக் கூடிய ஏனைய உடனடி விடயம் தெடர்பில் தீர்மானம் ஒன்று அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! காணி திருத்த சட்ட மூலம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது!

Previous
« Prev Post