Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 28 ஜூலை, 2019

அடுத்த தேர்தலில் மக்கள் ஆணை கிடைக்காவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்: டக்ளஸ் அதிரடி முடிவு!

  admin       ஞாயிறு, 28 ஜூலை, 2019


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கடந்த 72 வருடங்களாக தான் செய்த பாவங்களுக்கு 72 நிமிடங்கள் உரையாற்றி பாவமன்னிப்பு கேட்டாரோ தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரின் இனப்பிரச்சினை விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் இந்தியா எவற்றையும் மேற்கொள்ளாது. அதனால் தான் இலங்கைக்கு வந்து சென்ற இந்தியப் பிரதமர் மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைக்கவில்லை. கூட்டமைப்பினரும் அவரை சந்திப்பதற்கான முயற்சியை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சிய அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை மட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் இதில் மாற்றங்கள் ஏற்படாது. அண்மையில் கூட ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான இனப்பிரச்சினை விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் என இலங்கை அரசிற்கு இந்தியா வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்து சென்றிருந்தபோதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அவரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியிருந்தனர். ஆனால் இதுவரையில் அதற்கான ஏற்பாடுகளும் எவையும் நடைபெறவில்லை. அதற்கு காரணம் இந்தியா 13 திருத்தச் சட்த்தை மாத்திரம் நடைமுறைப்படுத்தினால் போதும் என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியாக உள்ளது. அதனாலேயே மோடியும் கூட்டமைப்பினரை சந்திகக அழைக்கவில்லை. இவர்களும் அங்கு சென்று அவரை சந்திப்பதற்கு தயங்குகின்றனர்.

நாம் அன்றிலிருந்து இன்றுவரை 13 ஆவது திருத்தச் சட்த்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றோம். இந்த நிலையிலேயே எமது கோரிக்கை யதார்த்தமானது என்பதனால், எமது கொள்கை பயணங்கள் சரியென தமிழ் மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை, தமிழ் மக்களின் காணிவிடுவிப்பு, ஒரு இலட்சம் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, 13 திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் போன்றவற்றை 6 மாதகாலத்திற்குள் எந்த தரப்பு நிறைவேற்றுவதாக உறுதிமொழி தருகின்றதோ அவர்களுக்கு எமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பூரண ஆதரவினை வழங்கும். மேலும், எந்த அரசானாலும் ஆட்சிக்கு வந்து ஆறு மாதக காலத்திற்குள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அது ஆறின கஞ்சி பழைய கஞ்சி என்ற நிலையேற்படும்.

இங்குள்ள அரசியல் வாதிகள் மக்களுக்கு சாத்தியமான விடயங்கள் தொடர்பில் சிந்திக்காது, தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிக்கும் நோக்குடன் சாத்தியமில்லாத பொய்யா வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, அது நிறைவேற்றப்படாத சந்தர்ப்பங்களில் கிழட்டு அரசியல் வாதிகள், சிங்கள அரசுகள் தம்மை ஏமாற்றிவிட்டது என மக்கள் மத்தியல் நாடகமாடுகின்றனர். அரசிற்கு இத்தனை வருடங்களாக முண்டுகொடுத்துவிட்டு தேர்தல் நெருங்குகின்றது என்றவுடன் 72 நிமிடங்கள் நின்று உரையாற்றியதாக முழக்கமிடுகின்றனர்.

ஆனால் அவர்கள் பாராளுமன்றத்திலே பதிலளிக்க வேண்டிய பிரதமர், அமைச்சர்கள் இல்லாத வெற்றுக் கதிரைகளுக்கே உரையாற்றினர். 72 நிமிடங்கள் பேசியமையானது, தமிழ் மக்களுக்கு 72 வருடமாக செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடுவதற்கோ தெரியவில்லை. இதேவேளை நடைபெறவுள்ள தேர்தல்களில், தமிழ் மக்கள் எனது கட்சிக்கு ஆதரவினை தராத பட்சத்தில் அரசியலில் இருந்த ஒதுங்கலாம் என சிந்திக்கின்றேன். ஏனெனில் மக்கள் ஆணை வழங்விலை என்றால் எனக்கு வலிந்து கிழட்டு அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை.

கடந்த வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இன்று வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் தனியார் காணியில் பாரிய பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. இதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டுகொள்ளாது மௌனம் சாதித்து வருகின்றது. கடந்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கூட்டமைப்பினர் எவ்வாறு விகாரை விடயத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அதனாலேயே இவ்வாறு வடக்கில் ஆங்காங்கே இருந்த நிலை மாறி இன்று பரவலாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இவ்வாறு முளைத்தவரும் விகாரைகள் தொடர்பில் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதிலும் அதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

காரணம் ஆராயப்படுகின்ற போது வரவு செலவு திட்த்தில் விகாரை கட்ட ஆதரவு தெரிவித்தவர்கள் எவ்வாறு அதை தடுப்பது என்கின்ற தடுமாற்றத்தில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனினும் இதற்கு முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பு கூற வேண்டும்

என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அடுத்த தேர்தலில் மக்கள் ஆணை கிடைக்காவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்: டக்ளஸ் அதிரடி முடிவு!

Previous
« Prev Post