onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, July 29, 2019

சினிமா பாணியில் நடந்த சேஸிங்: நேற்று இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டின் பின்னணி தகவல்கள்!

  admin       Monday, July 29, 2019


வாதுவ பகுதியில் நேற்று மாலை இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொள்ளையிட்ட வாகனத்துடன் தப்பிச் சென்றவரை இராணுவத்தினர் மறித்தபோதும், நிற்காமல் சென்றபோது இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடந்துள்ளது. வாகனத்தை மீட்கும் இந்த நடவடிக்கையை தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெத்தேகொட பகுதியை சேர்ந்த ஒருவரின் வாகனம், கிரிகம்பமுனுவ பகுதியில் வைத்து திருடப்பட்டுள்ளது. மெத்தேகொட பொலிசாரிடம் இது குறித்த முறைப்பாட்டை அவர் வழங்கியிருந்தார்.

திருடப்பட்ட வாகனத்தில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருந்ததால், அதன் பயணப்பாதையை உரிமையாளரால் அவதானிக்க முடிந்தது. அங்குருவதோட்ட பகுதியை நோக்கி வாகனம் செல்வது தெரிந்ததும், அந்த பகுதி பொலிஸ் நிலையத்திற்கு மெத்தேகொட பொலிசார் தகவல் வழங்கினர்.

அங்குருவதோட்ட பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிசார், இரண்டு மோட்டார் சைக்கிள்களில்  வாகனத்தை விரட்டி சென்றனர். வாகனத்தின் பயணப்பாதையை உரிமையாளர் கண்காணித்து பொலிசாருக்கு அறிவித்தபடியிருந்தார்.

வாதுவ பகுதியை நோக்கி வாகனம் செல்வது தெரிந்ததும், வாதுவையிலுள்ள இராணுவத்தினரின் வீதிச்சோதனை சாவடிக்கு தகவல் வழங்கப்பட்டது. இதன்படி, வேகமாக வந்த வாகனத்தை நிறுத்தும்படி இராணுவத்தினர் சைகை செய்தனர். எனினும், வாகனம் நிறுத்தாமல் சென்றது. இதன்போது வாகனத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

துப்பாக்கிச்சூடுகள் வாகனத்தில் பட்ட நிலையிலும் வாகனம் தப்பி சென்றது. மீண்டும் பொலிசார், இராணுவத்தினர் வாகனத்தை விரட்டி சென்றனர்.

வாகனத்தின் தரிப்பிடம் பற்றிய ஜி.பி.எஸ் தகவல்களின் அடிப்படையில், பாணதுறை பின்னவத்த பகுதியில் வாகனத்தை வலான பகுதி பொலிசார் கைப்பற்றினர். வாகனத்தில் இருவர் இருந்தனர். இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் பொலிசாரால் மீட்கப்பட்டார். மற்றைய நபர் தப்பியோடி விட்டார்.

காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றைய நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சினிமா பாணியில் நடந்த சேஸிங்: நேற்று இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டின் பின்னணி தகவல்கள்!

Previous
« Prev Post