onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Tuesday, July 30, 2019

மாணவி துஷ்பிரயோக வழக்கில் யாழ் அதிபர், ஆசிரியர்கள் விடுதலை!

  admin       Tuesday, July 30, 2019


எனினும் துர்நடத்தை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் மீதான வழக்கு தொடர்கிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற மாணவி ஒருவரை அந்தப் பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாலியல் துர்நடத்தையில் ஈடுபடுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டு வெளியானதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டுக்கு சென்ற ஆசிரியர் ஒருவர் சம்பவத்தை வெளியில் கூற வேண்டாம் என்று மிரட்டினார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்தின் பின்னரே விடயம் பூதாகரமாகியது.

இது தொடர்பில் மாணவர்கள், பழைய மாணவர்கள் என்று பாடசாலை சமூகமே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. குற்றத்துடன் தொடர்புடைய ஆசிரியர், அதை மறைக்க முயன்ற பாடசாலை அதிபர், மாணவியின் வீட்டுக்கு சென்று மிரட்டினார் என்று குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் ஆகிய நால்வரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவரென கூறப்பட்ட ஆசிரியர் கைதானார். அதிபர், மாணவியை மிரட்டியதாக கூறப்பட்ட ஆசிரியர், வகுப்பாசிரியர்  பொலிசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் இரு வாரங்களில் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பணியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டனர். விசாரணைகள் நடைபெற்றன. வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் சட்டமா அதிபருக்கு விடயத்தை பாரப்படுத்ியிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. பாலியல் துர்நடத்தையை மூடி மறைத்தார் என குற்றம்சாட்டப்பட்ட அதிபர், வகுப்பாசிரியர், மாணவியின் வீடு தேடிச் சென்று மிரட்டியதாக கூறப்பட்ட ஆசிரியர் ஆகியோரை குற்றமற்றவர்களாக கருதிய மன்று விடுவித்தது. வழக்கிலிருந்து அவர்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டனர்.

வழக்கின் முதலாவது எதிரியான, பாலியர் துர்நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியர் மீதான வழக்கு தொடர்கிறது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மாணவி துஷ்பிரயோக வழக்கில் யாழ் அதிபர், ஆசிரியர்கள் விடுதலை!

Previous
« Prev Post