onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Monday, July 1, 2019

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நியாயமானது: சிறிதரன் ஒப்புதல்!

  admin       Monday, July 1, 2019


இலங்கை தமிழரசு கட்சியினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய பேராளர் மாநாடு இடம்பெற்ற இடத்திற்கு முன்னால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய போராட்டம் நியாயமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியினாலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியிருப்பதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் 82 குடும்பங்களுக்கு காணி உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்வு யூலை முதலாம் திகதியான இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி நாதன்திட்டகுடியிருப்பு, குமாரசாமிபுரம், கண்ணகிநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 80 குடும்பங்களுக்கான காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்ட இந்த நிகழ்வு நாதன்திட்டகுடியிருப்பு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞரனம் சிறிதரனினால் காணி உரிமம் பத்திரம் வழங்கிவைக்கப்பட்ட இந்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள். அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழரசு கட்சியினரின் பேராளர் மாநாடு நடைபெற்ற யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்.

எவ்வாறாயினும் நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஈடுபட்டிருந்த போது அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குடிபோதையில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.

சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்கு நீதிகோரி பல்வேறு இன்னல்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் கடந்த ஒரு தசாப்தகாலமாக போராடிவரும் இந்த மக்களை பார்த்து தமிழரசுக் கட்சியினர் இவ்வாறு இழிவுபடுத்தியிருந்தது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் எவரும் எந்தவித மன்னிப்பும் கோரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி தமிழர் தரப்பினர் மேற்கொண்ட போராட்டத்திற்கு அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞர்னாசார தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் ஆதவு வழங்கியது போன்று, வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும் என சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

logoblog

Thanks for reading வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நியாயமானது: சிறிதரன் ஒப்புதல்!

Previous
« Prev Post