Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 6 ஜூலை, 2019

சிறிலங்கா பொலிஸாரும் பிக்குவும் அடாவடி! வீதிக்கு வெளியேற்றப்பட்ட பக்தர்கள்: நீராவியடி பிள்ளையார் வளாகத்தில் அவலம்

  admin       சனி, 6 ஜூலை, 2019


முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வில் அடாத்தாக தங்கியுள்ள பிக்கு மற்றும் காவல்துறையினர் பொங்கல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பொங்கலுக்கான அடுப்புகளை ஆலய வளாகத்தில் ஒழுங்கு செய்யும் போது அடுப்புக்களை குறித்த தனது பகுதிகளிலிற்குள் வைக்க வேண்டாம் என்று பொலிஸாரிடம் பிக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பொலிஸார் பிக்குவின் கட்டட வளாகத்திற்குள் அடுப்பு வைப்பதற்கு தடை விதித்துள்ளனர். 

அத்துடன் அடுப்புகளை வீதியில் வைத்து பொங்குமாறும் பொலிஸார் அடியவர்களுக்கு கூறியுள்ளனர். ஆனால் ஆலய வளாகத்திலேயே பொங்கல் செய்ய வேண்டுமென பக்தர்கள் கூறியுள்ளனர். எனினும் பிக்கு பொலிஸாரை வைத்து பக்தர்களை வெளியேற்றியுள்ளார்.

இந்த நிலையில் ஆலய வளாகத்தை விட்டு பிக்குவினால் வெளியேற்றப்பட்ட பக்தர்கள் முல்லை செம்மலை வீதியின் இரு மருங்கிலும் அடுப்புகளை வைத்து பொங்கலை மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்களில் இருந்து அறிய முடிகின்றது.



logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சிறிலங்கா பொலிஸாரும் பிக்குவும் அடாவடி! வீதிக்கு வெளியேற்றப்பட்ட பக்தர்கள்: நீராவியடி பிள்ளையார் வளாகத்தில் அவலம்

Previous
« Prev Post