onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Thursday, July 4, 2019

நிரூபணமாகியுள்ள பொய்கள்- ஹிஸ்புல்லாஹ்

  admin       Thursday, July 4, 2019


அத்தரலியே ரத்ன தேரர் மற்றும் ஞானாசார தேரர் உட்பட சிங்கள கடும்போக்குவாதிகளும் மஹிந்தவாதிகளும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக முன்வைத்ததுவந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பது நிரூபணமாகியுள்ளதாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷீம் உட்பட தற்கொலைதாரிகளுக்கும் மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை பொலிசார் விசாரணைகளை நடத்தி உறுதிப்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற விசாரணைகளில் கலந்துகொண்டு திரும்பிய போது தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறக்கோட்டையில் அமைந்துள்ள திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவுக்கு இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அழைக்கப்பட்டிருந்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தனக்கு ஹிஸ்புல்லாஹ் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து மேற்கொண்டிருந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய சுமார் நான்கு மணிநேரங்கள் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஹஸ்புல்லாவிடம்இ அவர் உட்பட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது பதவிகளில் இருந்து வெளியேறக் காரணமாக அமைந்த பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவினர்.

எமக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கும் இடையில் எந்தத் தொடர்புகளும் இல்லை என்பதை பொலிசார் நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருக்கின்றனர். அதற்கமைய ரத்ன தேரர், ஞானாசார தேரர் மற்றும் ஏனையோர் எம்மீது முன்வைத்து வந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. அதேவேளை எம்மீது சுமத்தப்பட்டுள்ள ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முடிவொன்றை எடுக்க வேண்டியுள்ளது. அவை தொடர்பான பிரச்சனைக்கும் தீர்வுகண்ட பின்னர் அடுத்தது என்ன செய்வது என்ற முடிவை எடுப்போம்' என்றார்.

logoblog

Thanks for reading நிரூபணமாகியுள்ள பொய்கள்- ஹிஸ்புல்லாஹ்

Previous
« Prev Post