Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Wednesday, July 10, 2019

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு வரலாறில்லை… முஸ்லிம்களிற்கு நூற்றாண்டு வரலாறுண்டு!

  admin       Wednesday, July 10, 2019


இப்படி இன்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார் மட்டக்களப்பு எம்.பி வியாழேந்திரன்.

நாடாளுமன்றத்தில் இன்று அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாத்தில் கலந்து கொண்டு, அம்பாறை எம்.பி க.கோடீஸ்வரன் உரையாற்றும்போது, சஹ்ரானை இயக்கிய தலைவர் யார் என்பதை இன்னும் அரசாங்கம் கண்டுபிடிக்கவில்லை. சஹ்ரானின் போதனைகளை கேட்டு ஆயிரக்கணகான வறுமையானவர்கள் அவரின் பின்னால் சென்றார்கள் என உரையாற்றினார்.

இதன்போது குறுக்கிட்ட எம்.எச்.எம்.ஹரீஷ்- சஹ்ரானின் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்றால், புலனாய்வு பிரிவிற்கு தெரியாமல் உங்களிற்கு தெரியுமா? பயங்கரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் குரல் கொடுக்கிறார்கள். சம்மாந்துறையில் பயங்கரவாதிகளை நாம்தான் காட்டிக்கொடுத்தோம் என்றார்.

இதன்போது கோடீஸ்வரன் கருத்து தெரிவித்தபோது, சஹ்ரானின் தலைவர் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றேன். சஹ்ரைானை பற்றி கதைத்ததும் ஏன் நீங்கள் அநாவசியமாக தலையிடுகிறீர்கள் என்றார்.

இதன்போது ஆக்ரோசாக குறுக்கிட்ட ஹரீஷ், கல்முனையில் தமிழர்களிற்கும், தமிழ் பிரதேசசெயலகத்திற்கும் வரலாறில்லை. ஆனால் முஸ்லிம்களிற்கு நூற்றாண்டு வரலாறு உள்ளது என்றார்.

இதன்போது, வியாழேந்திரன் எம்.பி குறுக்கிட்டு, கல்முனையில் தமிழர்களிற்கு வரலாறில்லையென்ற கருத்தை வாபஸ் பெற வேண்டுமென்றார். எனினும், தான் அப்படி சொல்லவில்லையென மறுத்த ஹரீஷ் எம்.பி, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு வரலாறு இல்லையென்றே சொன்னதாக குறிப்பிட்டார்.

இதன்போது சூடான வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், “பயங்கரவாதத்துடன் தொடர்புடைவர்கள் இஸ்லாமியர்கள் இல்லையென்கிறீர்கள். அப்படியானால், அவர்கள் இந்துக்களா? அல்லது கிறிஸ்தவர்களா? அல்லது பௌத்தர்களா? அவர்களின் பெயர் கத்தசாமியா? அல்லது முத்துபண்டாரவா?“ என வியாழேந்திரன் கேள்வியெழுப்பினார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு வரலாறில்லை… முஸ்லிம்களிற்கு நூற்றாண்டு வரலாறுண்டு!

Previous
« Prev Post