Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Wednesday, July 3, 2019

கடும் பாதுகாப்புடன் நீதிமன்றில் சஹ்ரானின் உறவினர்கள்

  admin       Wednesday, July 3, 2019


உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஷஹ்ரான் ஹாசிமின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் இன்றைய தினம் கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சாய்ந்தமருது பகுதியில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தி மரணசான்றிதழ் வழங்குவதற்காகவே இவர்கள் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் 250 க்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்ட தொடர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஏப்ரல் 27 ஆம் திகதி அம்பாறை சாய்ந்தமருது வெலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் வைத்து குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டனர்.

இதன்போது தீவிரவாதிகள் ஆறு பேர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த அந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தி மரணசான்றிதழ் வழங்குவதற்காக ஷஹ்ரான் ஹாசிமின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் விசாரணைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவ்வாறு மரண விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஸஹ்ரானின் தங்கையான நியாஸ் மதனியா மற்றும் அவரது கணவர் எம்.எம். நியாஸ், சாய்ந்தமருது தாக்குதலில் பலியான வார உரைகல் ஊடகவியலாளர் என கூறப்படும் நியாஸ் என்பவரின் மனைவி அஸ்மியா உள்ளிட்டோர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றப்புலனாய்வு பிரிவினரதும், சிறைச்சாலையினதும் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.

இன்று புதன்கிழமை கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் தொடர்பான விசாரணை யாவும் நீதிவானின் அறையில் மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது வேறு வேறாக ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு நீண்ட நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனையடுத்து குறித்த மரண விசாரணை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கடும் பாதுகாப்புடன் நீதிமன்றில் சஹ்ரானின் உறவினர்கள்

Previous
« Prev Post