Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 6 ஜூலை, 2019

ஈரானின் அதிரடி எச்சரிக்கையால் அதிர்ந்துபோயுள்ள இங்கிலாந்து?!

  admin       சனி, 6 ஜூலை, 2019


ஈரான் நாட்டு எண்ணெய் கப்பலை விடுவிக்காவிட்டால், பதிலுக்கு இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் சிறை பிடிக்கப்படும் என ஈரான் நாட்டு படைகளின் மூத்த தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளமை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த எச்சரிக்கையை சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி, ஈரானின் எண்ணெய் கப்பலான சூப்பர்டேங்கர் கிரேஸ் 1, சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக, கிப்ரால்டர் கடற்பகுதியில் வைத்து இங்கிலாந்தின் ராயல் மரைன்ஸ், அந்த கப்பலை சிறைப்பிடித்திருந்தது.

இந்நிலையில் ஈரானின் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதற்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கப்பல் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் நாட்டு படைகளின் மூத்த தளபதி மொக்சென் ரேசாய், ‘ஈரானின் எண்ணெய் கப்பலை இங்கிலாந்து விடுவிக்காவிட்டால், இங்கிலாந்தின் எண்ணெய் கப்பலை சிறைபிடிக்க வேண்டியது, ஈரான் அதிகாரிகளின் கடமை’ என குறிப்பிட்டுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஈரானின் அதிரடி எச்சரிக்கையால் அதிர்ந்துபோயுள்ள இங்கிலாந்து?!

Previous
« Prev Post